நாம் நினைக்கும் வரை

பிரிவுகள் என்பது நிறந்தரமில்லை
       நாம் விலகும் வரை.....
நினைவுகள் மட்டுமே சொந்தமில்லை
       நாம் இணைந்திருக்கும் வரை.....
கனவுகள் என்றும் கலைவதில்லை
      நாம் அடையும் வரை ......
வெற்றிகள் என்றும் கடினமில்லை
      நாம் முயற்சிக்கும் வரை.......
தோல்வி என்பது கடைசியில்லை
      நாம் வெல்லும் வரை.....
பணம் என்றும் பெரியதில்லை
     நாம் அடிமையாகாத வரை......
உறவுகளில் என்றும் பிரச்சனையில்லை
     நாம் மதிக்கும் வரை......
மனிதம் என்றும் சாவதில்லை
     நாம் மறக்கும் வரை .....   
மகிழ்ச்சி என்றும் மறைவதில்லை
     நாம் தொலைக்கும் வரை.....
அனைத்தும் நம்மிடமே நிலைத்திருக்கும்
     நாம் நினைக்கும் வரை......
நினைத்து கொண்டே இருங்கள்
    இவைகள் கிடைக்கும் வரை.....

எழுதியவர் : புவனேஸ்வரி (22-Oct-21, 7:46 am)
சேர்த்தது : புவி
Tanglish : naam ninaikum varai
பார்வை : 1149

மேலே