sugan dhana - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sugan dhana |
இடம் | : kanchipuram |
பிறந்த தேதி | : 06-Feb-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 563 |
புள்ளி | : 140 |
பழக இனியவன் ........
நானும் புனிதமாகதான் இருந்தேன்
மனிதன் குளிக்கவருவதற்கு முன்
கங்கை நதி ..............
அவள்
ஒவ்வொன்றாய்
வெட்டி எரியும் பிறை நிலவுகள்.....
அவன் மீதுள்ள கோபத்தில் எங்களையும் பிரித்து விடுகிறாள் குடும்ப தலைவி.....
வெட்டுபவன் தலையை பார்த்து
உள்நுழையும் அதிபுத்திசாலிகளில் ஒருவனாகத்தான் நானும் நிற்கிறேன் சலூன் கடை வெளியே ......
அவள்
ஒவ்வொன்றாய்
வெட்டி எரியும் பிறை நிலவுகள்.....
அவன் மீதுள்ள கோபத்தில் எங்களையும் பிரித்து விடுகிறாள் குடும்ப தலைவி.....
காலேஜு போன மக
காணாம போயி ட்டாளே
கடுதாசி எழுதி வச்சு
காதலனோட
போயிட்டாளே ,
பாத்து பாத்து
வளர்த்த மக
பாதியில போயிட்டாளே
கொல்லாம ஏ உசுர
கொன்னுபுட்டு போயிட்டாளே ...
சந்தையில நிக்கவைச்சு
சாதிசனம் ஏசுதே
கலங்காத என் ஐய்யனாரு
கண்ணீரோட நிக்குதே
படுபாவி எங்க போன ,
என் பாவிமக எங்க போன
பெத்தெடுத்த பாவத்துக்கா
சொல்லாம கொள்ளாம
ஓடி போன ?
காலுல முள்ளு குத்தி
கிழிச்சாலும் உழைச்செனே
உங் -கலியாண காசு சேக்க
கா வயிறா கெடந்தேனே !
உங்கப்பன்கிட்ட உதவாங்கி
காலேஜு சேத்தேனே ...
நீ காதலிச்சு ஒடுவன்னு
கனாக்கூட காணலியே ....
பட்டணத்து புள்ள மாதிரி
பந்தாவா நீ போக
பட்
செழித்த விளைச்சளைப்
பார்க்கும் போதெல்லாம்
சாவு விளைச்சலென
செத்துப்போன
தாத்தாவின் நினைவுகளே
வீடுநிறைஞ்சிருந்தது.
மெத்த வீடுகட்ட
உத்திரம் போட்ட வீட்டை
இடித்தப் போது
இடியோசையில்
ஒளிந்துகொண்ட
அப்பாவின் விசும்பல்
அண்டைவீடுவரை பரவியிருந்தது…
வீட்டைவிட்டு போகும்போது
பாரமில்லாமலேயே
படுத்து உருண்ட
அடிமாட்டு விலைக்கு விற்ற
உழவு மாடுகளும்…
உறவெல்லாம்
வீடு நிறைஞ்சிருந்தாலும்
ஏதோ ஒன்றுக்காக
ஏங்கும்
உறவுகளின் ஏக்கத்திலும்
பிரிவுகளின் வலியை
பேசாமல் உணர்ந்தோம்…
இயற்கையின் குளுமை
குடை விரித்த மரங்களின்
குளுமையை
மறந்து பல காலம் !
காண்கிரீட் வளர்ச்சிகள்
பாதையின் விரிவுகள்
செயற்கையின் அழகுகள்
செயற்கை
குளுமைகள் பெற
விதம் விதமாய்
கடைகளில்
மின் காற்றாடிகள்
முழுத்தொகை
இல்லையெனில்
தவணைகளில்
விற்கும்
மின் குளிர்ப்பான்கள்
இனி இயற்கையின்
குளுமைகள்
அருங்காட்சியத்தில்
இல்லை
விலைக்கு !
தென்றலே தூது போ...
கள்வா
என் இதயத்திருடா
வருகிறேன் என
கையசைத்து மறைந்துவிட்டாய்
என்னுள் உறைந்துவிட்டாய்...
என்னை ஏய்த்துவிட்டு
இதயம் பெயர்த்துவிட்டு
இனிய முத்தம்
முடிவாய் தந்து
எங்கே தான் சென்றாயோ...
மணம் மிகுந்த தென்றலே
தூது போ..!
என் காதலன் இடம்
அறிந்து தூது போ...!
அவன் நினைவுகளை
தின்றே நான் மெலிகிறேன்..
அவன் என்னை சேராவிட்டால்
என் உடல் நிலமடையும்...
தூது போ...!
என் கண்ணீரும்
வற்றிவிட எனக்காக
அழுகின்றது மேகம்...
விரைவில் வந்தவன்
விழிகளை காட்டச்சொல்...
தென்றலே...
இல்லையேல் என் விழிமூடிடும்
தூது போ...!
நான்
ஒன்று சொல்கிறேன்,
நீ
ஒன்றை
புரிந்துகொள்கிறாய்.....
இப்படிக்கு
ஓவியம்....