இயற்கையின் குளுமை

இயற்கையின் குளுமை

குடை விரித்த மரங்களின்
குளுமையை
மறந்து பல காலம் !

காண்கிரீட் வளர்ச்சிகள்
பாதையின் விரிவுகள்
செயற்கையின் அழகுகள்

செயற்கை
குளுமைகள் பெற

விதம் விதமாய்
கடைகளில்
மின் காற்றாடிகள்

முழுத்தொகை
இல்லையெனில்
தவணைகளில்
விற்கும்
மின் குளிர்ப்பான்கள்

இனி இயற்கையின்
குளுமைகள்
அருங்காட்சியத்தில்
இல்லை
விலைக்கு !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (18-Jan-18, 12:34 pm)
பார்வை : 288

மேலே