தமிழ் தேவா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழ் தேவா
இடம்:  கோபாலசமுத்திரம், சீர்காழ
பிறந்த தேதி :  14-May-1976
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jan-2018
பார்த்தவர்கள்:  67
புள்ளி:  9

என் படைப்புகள்
தமிழ் தேவா செய்திகள்
தமிழ் தேவா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2018 11:02 pm

கிட்டயிருக்கும் போது
கீழ்வானத்துச் சிவப்பாய்
கண்ணுரெண்டும் சிவந்திருக்கும்
கோவத்தில சிவந்திச்சானு
கொஞ்சினா
தூரதேசத்து துயரங்கள
மாளாது சொல்லிமடிவ…
செஞ்சோலப் பிஞ்சுகள
நெஞ்செல்லாம்
சுமந்திருந்த…
மண்வாசத்த மறக்காத
மக்க மனசெல்லாம்
நிறஞ்சிருந்த.
தாய்மொழிய மறந்தா
தாயமறந்திடுவன்னு
தலைமேல சத்தியஞ்செஞ்ச.
புயலுல அடிப்பட்டப்ப
புழுபுழுத்த
அரிசியைத் தந்தாங்கணு
புழுவா துடிச்ச.
புரியாத மக்ககிட்ட
சொல்லிச் சொல்லிப் புலம்பின.
உழைச்சி களைத்து
ஓடாப் போனவங்ககிட்ட
ஒரு வார்த்த பேசினாலும்
உறவோடு பேசுவ.
அம்பேத்காரையும்…
பெரியாரையும்…
பொழுதெல்லாஞ் சொல்லி
பூரித்துப் போனப்ப
பூத்தப்பூவா ந

மேலும்

தூய்மையான எண்ணங்கள் வாழும் உள்ளங்கள் எப்போதும் பிறர் அன்பை ஏதோ ஒரு வகையில் மரணம் வரை சம்பாரித்துக் கொண்ட இருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Feb-2018 11:47 am
தமிழ் தேவா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2018 10:09 pm

நிலங்கிழித்து நீர்வார்த்து
வரப்புக் கட்டி
வளமை சேர்த்து
உழுதுதேய்ந்த உழவனை
உலகுக்குக் காட்டும் காலம்
வேணிற்காலம்…
அவன்
அடிச்சுவடுகளை
அடையாளப்படுத்தப்
பாதச்சுவடுகளைப்
பதப்படுத்தும் பருவக்காலம்…
நாளமில்லாச் சுரப்பிகளாய்
வற்றிப்போன நதிகள்…
வெடிப்புகளிலிருந்து
வெளிவரமுடியாமல்
பரிதவிக்கும்
பாதத்து விரல்கள்…
ஆடையற்ற
உழவனைப்போலவே
அரை நிர்வாணத்தில்
அறுவடை நிலம்…
நிழலின் அறுமை
வெய்யிலில் தெரிய
தன்னிழலிலாவது
இளைப்பாரத் துடிக்கும் கால்கள்.
காணும் இடமெல்லாம்
பசுமை கருக்கிய
கதிர்கள்…
தாகம் மிகுந்த
மாந்தனின்
சோகம் நிறைந்த காலம்
வேணிற்காலம்…

மேலும்

அருமை.... 04-Feb-2018 11:46 am
நெல்லை அறுக்கும் கைகளில் தான் உலகத்தின் ஒட்டு மொத்த வறுமையும் ஒன்றாகி வாழ்கிறது இந்நிலையை என்னவென்று சொல்வது என்று தான் தெரியவில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Feb-2018 11:44 am
தமிழ் தேவா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2018 9:04 am

நீயூட்டனின்
ஆப்பில் தோட்டத்து
ஆய்வுகள் எல்லாம்
பொய்த்துவிட்டன
புவியீர்ப்பு விசையை
புறம் தள்ளிய
உன் விழியீர்ப்பு விசையில் ...

மேலும்

nice 03-Feb-2018 5:37 pm
கன்னியின் விழி பார்வையில் காளையின் இதயம் கரும்புச் சாறாய் வழிந்தோடிடும். வாழ்த்துகள்... 03-Feb-2018 3:57 pm
அவளது பார்வைகள் துடிக்கும் இதயத்தின் விசை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 1:48 pm
இரும்பு இதயமென்றாலும் பெண்ணின் காந்த விழி ஈர்ப்பில் தப்ப முடியாது 03-Feb-2018 1:04 pm
தமிழ் தேவா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2018 10:46 pm

வீதியெங்கும் தோரணங்கள்
வண்ண வண்ண நிறங்களில்
அசைந்தாடும் கொடிகள்…
சுண்ணாம்பினால்
சுத்தம் செய்துகொண்ட
சுவர்கள்.
கட்சிக் கொடிகளை
காற்றில் பறக்கவிடும்
சட்டையில்லா மனிதர்கள்.
வாக்குறுதிகள்
வாரிவாரி வழங்கப்பட்டன…
மூன்றுவேலை உணவுக்கு
முழு உத்திரவாதம்
அளிக்கப்படும்…
நாட்டில்
வறுமைகள் ஒழிக்கப்படும்…
சாதிப்பூசல்
சாகடிக்கப்படும்
மனிதநேயம்
வளர்க்கப்படும்…
மீண்டும் மீண்டும் ஒலித்தன
சென்ற தேர்தலில்
பதிவுசெய்த ஒலிநாடா…

மேலும்

சிறப்பு வாழ்த்துக்கள் 04-Feb-2018 5:55 am
கானல் நீரில் எப்படிங்க நிலா முகம் பார்க்க முடியும் அது போல் தான் அரசியல்வாதியின் உறுதிமொழிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 1:07 pm
தமிழ் தேவா - தமிழ் தேவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2018 10:35 pm

செழித்த விளைச்சளைப்
பார்க்கும் போதெல்லாம்
சாவு விளைச்சலென
செத்துப்போன
தாத்தாவின் நினைவுகளே
வீடுநிறைஞ்சிருந்தது.
மெத்த வீடுகட்ட
உத்திரம் போட்ட வீட்டை
இடித்தப் போது
இடியோசையில்
ஒளிந்துகொண்ட
அப்பாவின் விசும்பல்
அண்டைவீடுவரை பரவியிருந்தது…
வீட்டைவிட்டு போகும்போது
பாரமில்லாமலேயே
படுத்து உருண்ட
அடிமாட்டு விலைக்கு விற்ற
உழவு மாடுகளும்…
உறவெல்லாம்
வீடு நிறைஞ்சிருந்தாலும்
ஏதோ ஒன்றுக்காக
ஏங்கும்
உறவுகளின் ஏக்கத்திலும்
பிரிவுகளின் வலியை
பேசாமல் உணர்ந்தோம்…

மேலும்

அருமை.. வலியை உணர முடிகிறது.. 28-Jan-2018 2:40 pm
மேலும்...
கருத்துகள்

மேலே