வாக்குறுதிகள்

வீதியெங்கும் தோரணங்கள்
வண்ண வண்ண நிறங்களில்
அசைந்தாடும் கொடிகள்…
சுண்ணாம்பினால்
சுத்தம் செய்துகொண்ட
சுவர்கள்.
கட்சிக் கொடிகளை
காற்றில் பறக்கவிடும்
சட்டையில்லா மனிதர்கள்.
வாக்குறுதிகள்
வாரிவாரி வழங்கப்பட்டன…
மூன்றுவேலை உணவுக்கு
முழு உத்திரவாதம்
அளிக்கப்படும்…
நாட்டில்
வறுமைகள் ஒழிக்கப்படும்…
சாதிப்பூசல்
சாகடிக்கப்படும்
மனிதநேயம்
வளர்க்கப்படும்…
மீண்டும் மீண்டும் ஒலித்தன
சென்ற தேர்தலில்
பதிவுசெய்த ஒலிநாடா…

எழுதியவர் : இரா.தேவேந்திரன் (2-Feb-18, 10:46 pm)
Tanglish : vakkuruthikal
பார்வை : 664

மேலே