சிந்தனை செய் தமிழா

ஐய்யோ பாவமென்று
வாழ இடம் கொடுத்தால்
நட்புறவு கொண்டு
துரோகம் செய்து
உலகாண்ட தமிழனை
அடக்கி ஆளப்பார்கிறான்...!

குள்ளநரிக்கூட்டத்தை
என்னவென்று சொல்வது?
அமைதியாய் நாம் இருந்தால்
கோழையென்று நினைக்குது!

போர்களம் கண்டவனை
பேராற்றல் கொண்டவனை
துரோகம் கண்ட போதும்
கலங்காமல் நின்றவனை
சீண்டிதான் பார்க்கிறான்
பாயும் புலி ஒருவன்
இன்று இல்லாததால்...!

தரம் கெட்ட ஒருவனை
தலைவானாய் தேர்ந்தெடுத்தால்
நாட்டுக்கு என்ன பயன்?
அவன் வீட்டுக்குத்தான் நல்ல பயன்!
புரிந்ததா சுயநலம்?

தான் மட்டும் வாழ
தன்மானத்தை இழப்பதா?
தந்திரத்தை அறிந்தும் பின்னும்
சும்மா இருப்பதா?
எழுந்திடு தமிழா
விரைந்திடு தமிழா
வீரத்தமிழனாய்
ஈழத்து பிரபாகரனாய்...!

ஆண்மை தவறாத 
அழகான ஆண்மகன்
தன் இனம் வாழ 
ஆயுதம் தூக்கிடுவான்
தடைகள் பல உடைத்து
தன் இனத்தைக் காத்திடுவான்
எதற்கும் அஞ்சாமல் 
எதிரியின் தூக்கத்தை
எந்நாளும் கெடுப்பான்
ஈடில்லா தலைவனாய்
பகைவரை நடுங்க செய்வான்
விடுதலை புலியாய்
இன வீரத்தை விதைத்து
சரித்திரம் படைக்க வா!

பாரதிக்கு முன்பே
மீசை முறிக்கினான் தமிழன்

யான் அறிந்த மொழிகளிலே
தமிழ் போல் இனிதொன்றுமில்லை
என்றுரைத்ததேன் பாரதி?
கொஞ்சம் சிந்தித்து பார் - நீ!

தமிழன் முதன்மையாய் இருப்பதால்
அதை அழிக்க நினைக்கிறான்
சூழ்ச்சி பல செய்து
வரலாற்றை மறைக்கிறான்
வீரத்தமிழன் தமிழ்நாட்டை
ஆளக்கூடாது என்கிறான்

காரணம்...
பெருந்தன்மையாய்இருப்பதினால்தானோ?!

போதும்....
வந்தாரை வாழவைத்ததிங்கு
விரட்டுவோம்
நம் நாட்டைவிட்டு!

ஓர் தமிழன்தான் தமிழனை ஆளனும்
உலகெங்கும் தமிழன் சிறப்பாய் வாழனும்!

எழுதியவர் : கிச்சாபாரதி (2-Feb-18, 10:02 pm)
பார்வை : 110

மேலே