துர்ச்சாதனர்கள்

தூரத்து நிலவழகு
துள்ளி வரும் அலையழகு
இது எல்லாம் இயற்கை ஒப்பனைகள்
அன்று பெண்ணைப் பூ என்றும்
பாவையென்றும் தாய்மை என்றும்
கற்புக்கரசி என்றும் ஏன்
தெய்வம் என்றே வணங்கிய உலகமிது

பூக்கள் இன்று பூக்காமலே சருகாகிறது
பள்ளி சென்ற பாவை வீடு திரும்பவில்லை
தாய் கூட தாய்மையை மாற்றானால் இழக்கிறாள்
விலை பேசும் பாெருளாகி விட்டது கற்பு

முன்னாேர் காலம் தாெட்டு
கற்பைக் காக்க பெண் தீயிலெரிந்தாள்
பாஞ்சாலி துகிலுரிக்கப்பட்டாள்
கண்ணன் மானம் காத்தான்

உறவு முறையற்ற வல்லுறவுகள்
நாளும் ஒரு செய்தியாகி
உயிரகள் பாேகிறது கணக்கின்றி
நான்கு வயதென்ன எழுபது வயதென்ன
பெண்ணாயிருப்பது பாவமா
துர்ச்சாதனர்களிற்கு இது வரமா

பெண்ணென்றால் பேயும் இரங்குமாம்
எங்காே கேட்ட நினைவு
பெண்மையைக் காக்க ஏது வழி
பெண்மையின் சிறப்பு தாய்மையில்
தாய்மைக்கே வேலி இல்லை
துர்ச்சாதனர்கள் இல்லாத
தூய்மையான உலகில் தான்
பெண்மைக்கு சுதந்திரம்

எழுதியவர் : அபி றாெஸ்னி (2-Feb-18, 8:29 pm)
பார்வை : 122

மேலே