முனைவர் இர வினோத்கண்ணன் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : முனைவர் இர வினோத்கண்ணன் |
இடம் | : தஞ்சாவூர், தற்போது சீனாவி |
பிறந்த தேதி | : 21-Sep-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 3285 |
புள்ளி | : 2166 |
பிராண வாயுவைவிட
பிரதானமாய் - நட்பை
சுவாசித்து நடமாடும்
சோழச் சிறுவன் !
தமிழ் மீது தீராக்காதல்
ஆறாய்ப் பாய - அறிவியல்
மீதான ஆராய்ச்சிக் காதல்
கடலாய்ப் புக - முப்போகமாய்
இனித்துக் கிடக்கிறது வாழ்வு
முதல்மழையின் உழவைப்போல !
எதுவும் கைவரும்,
தமிழன் என்பதால்
கவிதையும் !
அறுவாள் வேண்டாம்,
அன்பே போதும் - எனை
இழுக்கவோ, அறுக்கவோ !!!
உயிர்-வேதியியலில் இளங்கலை, முதுகலை மற்றும் பிஹெச்டி முடித்துவிட்டு, ஐஐடி சென்னையில் இணை ஆராய்ச்சியாளாராக பணிபுரிந்தேன். தற்போது சீனாவின் ஷாண்டாங் பல்கலைகழகத்தில் முனை முதுநிலை ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறேன் .
கவிதைகள் பற்றிய உங்கள் விமர்சனங்கள், கவிதைகளை மேலும் கூர்தீட்ட உதவி செய்யும் !
கட்டுத்தறிக் காளையென
ஒத்திசைந்து ஓடுகின்றன
தனித்தனி காடுகளில்
வெற்றிடக் கூடுகளில்
தவமும் இருந்தபடி !
இடியோடி இடுப்பேற
வந்தாலும் - இருதயக்குடுவை
தெறித்தோடி விழுந்தாலும்
பின்னோக்கிப் பார்ப்பதில்லை
யாரிட்ட கட்டளையோ ?!
சுக துக்கங்களை
பளிச்சிடும் பற்களுடனோ
கண்ணுப்பு நீருடனோ
கடந்து விடுகின்றன
கண்டு ரசிக்க, ருசிக்க
எதற்கும் நேரமின்றி !
தலைதிருப்ப விழைந்து
தவறிய நொடிகளும்
தாண்டிவிடத் துணிந்து
கனியாக் கனவுகளும்
கோடிகளில் உண்டு !
"காக்கா உட்கார்ந்த கதைதான்
தெரிவதில்லை யாருக்கும்"
அவர்தம் புலம்பல்கள்
கண்ணாடிக் கூடுதாண்டி
வருவதில்லை ஏனோ !
தொடுதிரையி
சீரழியும் நம் நாட்டை
சீராக்கிக் காட்டிட
வீடேறி கைகூப்பும்
கொழுத்த சாக்கடைகள்
கொடுத்த பணத்திற்கு
விலையாக விளைந்த
வாலறுக்க வேண்டாமா ?
மூளையை மட்டுமல்ல
முதுகெலும்மையும்
பணத்தாளின் பாதத்தில்
புதைத்து விட்டு - நீவிர்
வெள்ளுடை நரிகளை
வென்றிட துணைபோதல்
சுய துரோகமில்லையா ?
நீங்கள் தீர்மானிப்பவன்தான்
நாட்டின் தலையெழுத்தின்
முன்னெழுதென உணர்ந்தும்
கையூட்டு வாங்கிவிட்டு
கையறு நிலை கண்டால்
கரைவேட்டிகள் தரப்போவது
அல்வா அல்லவா ?
தமிழின மரபணுவில்
பின்னிக் கிடக்கும்
தன்மான இழைகளை
உருக்கி ஊற்றிவிட்டு
வாழும்போதே வாய்க்கரிசி
உண்ணுதல் தகுமோ ?
பெருச்சாளிகள்
என்னான்மக் குடுவையில்
கோடிகடல் உயிர்கொட்டி
சிறகுடை கயலென
நீந்திக் களிக்கிறாய்
அலைகளை மென்றபடி !
வாழ்க்கை வானவில்லில்
உச்சிக் கிளைக்கண்டு
முகட்டின் மூக்கினை - உயரே
பறக்க விடுகிறாய்
கயிறறு பட்டமாய் !
கனவால மரத்தின்
சிறகிடை பொந்தினுள்
சன்னல்களால் நெய்த
கூடொன்றை பிறப்பித்து
அடையப் பணிக்கிறாய் !
உள்ளங்கை ரேகையெங்கும்
ஜீவ நதியென விரவி
சில்லிட வைக்கிறாய்
ஆயுள் முழுதிற்கும்
அசைபோட்டுச் சிலாகிக்க
நினைவுகள் தந்துவிட்டு !
உன்னுடனான
ஒவ்வோர் நொடியும்
தத்தம் முகத்திலோர்
தந்தமும் துதிக்கையும்
வரைந்து கொண்டு
நீரிரைத்து மகிழ்கின்றன !
துளசிமாடமென - உனை
உடல் தானம் செய்த
அம்மரம் - நாற்காலியாகி
உட்கார்ந்து கொண்டது,
உயிர் மட்டும் தாவி
சொர்க்கம் சென்று
கடவுளை தேடியது !
தன் கிளைக் கைகளால்
தன்னை கிள்ளி
நடப்பை நம்பியபின்
மனக் குமுறல்களை
வாய்விட்டு கதறியது
கன்னக்காட்டு மழையோடு !
விதையாக, தழையாக,
காயாக, கனியாக
உணவாகிறேன்,
உண்டு களி(ழி)த்தபின்
மலமாகி எருவாகிறேன் !
ஆடு, மாடு, மனுச
தடை மீறி வளர்ந்தால்
வியர்வைக்கு விருந்தளிக்கும்
வெயில் தாங்கும் நிழலாகிறேன்,
அமர, அமர்த்த, சாய, படுக்க என
உயிர் தொலைந்தும்
உடல் கொண்டு
உதவித் தொலைக்கிறேன் !
தலைக்கெல்லாம் தலையாய்
மனித செல்களின் - ஒரே
உணவாம் உயிர்வளியை
வடிகட்டி வார்த்தெடுத்து
பாரொளி முழுதும்
கடைந்து செதுக்கிய
பேரொளிப் புன்னகை
மாவொளி விழிகளுடன் !
தோற்ற எதிரியும்
தொடை நடுங்கி வியக்கும்
வீரத்தின் தோற்றுவாய் - இனி
எப்போது தோன்றுவாய் !
உன் உயிர் தேடி வந்த
கொலையாளி எவரும்
கொன்றது இல்லை
தத்தம் பயம் கூட - ஏன்
நின்றது கூட இல்லை
உன் நிழல் அருகில்கூட !
உன் சிந்தனைத் துளிகள்
பெருகிப் பெருங்கடலென
எதிரிகள் காட்டில்
தீயெனப் பற்றினாலும்,
உன் எல்லைக்குள்
சர்க்கரை வார்த்தது !
எமனுக்காய் அழைத்துவிட்டு
ராணுவக் காலனியின்
கடைசி முடிச்சை - பெரு
மூச்சிழுத்து முடித்திருப்பாய் !
பணக்காரனாக பிறந்தாய்
கோடிகளில் இதயம் வென்று
மாவீரனாய் இரு
கசாப்பு கடை ஆடுகளை
பற்றிய கவிதை தாங்கிய
தாளொன்றை உண்ணாது
கடந்தன குட்டிகள்...
அதே தாளை கிழித்து
வடை குடித்த எண்ணெய்யை
குடிக்க பணித்தான்
வெட்டும் இடைவெளியில்
கசாப்பு கடைக்காரன்
எழுதியவன் நாவிற்கு
கொழுப்புக் கறி பிடிக்குமென்று
தேர்ந்தெடுத்து தட்டிட்டாள்
இல்லாள் இருமுறை
கடைசி வரை
நமக்காக போலியாகக்கூட
இறக்கப் படுவார்கள் என்
தெரியாமலேயே இறந்த
ஆட்டிற்கு என் இரங்கல்கள் !
- வினோதன்
சிறையில் பிறந்த
சிறையில் வளர்ந்து
சிறையில் இறந்த
அப்பாவி கொரில்லாவின்
மரண வாக்குமூலம் !
ஹரம்பி என் பெயர்,
சேர்ந்து இழுப்போம்
என்பது பொருள் - ஆம்
சேர்ந்து தான் இழுத்தீர்கள்
என்னுயிரின் வேரை !
பதின்ம வயதாம் பதினேழில்
இன விருத்திக்காக
வேரோடு பிடுங்கி
வேறிடம் நட்டீர்கள்,
பெண்டிர் இரண்டோடு !
நீங்கள் அளித்த உணவை
விரும்பியோ விரும்பாமலோ
சேர்ந்தே தின்று செரித்தோம்,
மிருகக் காட்சி சாலையெனும்
றெக்கையழிப்பு சிறைகளில் !
நீங்கள் விரும்பிய
உணவளித்து - குளிப்பாட்டி
உங்களை - ஒரு கூட்டில்
சுதந்திரமாக அடைத்தால்
உயிர் வாழ் இயலுமா
சொல்லுங்கள் ஆறறிவிகளே !
அதுவ
வா
வந்து
வலஞ்சுழி
முத்தம் தா !
தா
தந்து
எனக்காய்
சுவாசித்துப் போ !
போ
போய்
கிறுக்கு
இதயத்தில் பா !
பா
பாவில்
காமம் தாண்டிய
காதல் மோ !
மோ
முகர்ந்து
அணி மகிழ்வுற
மனதில் நூ !
நூ
நூத்து
கலவாமல் கலந்து
நம்மை ஞா !
ஞா
இரண்டற
சாவி தொலைந்து
தூரம் போ !
பூ
பூத்து
சொர்க்கம் தேடி
மீண்டும் வா !
நாப் பறையறைந்து
நாற்றிசையும் முழவறைந்து
உள்ளே உறங்கும் சிறுத்தையை உசுப்பிவிடு - தம்பி
உயர்வுத் தாழ்வு பேதம் நீக்கிவிடு
திரைபோ லெழுச்சி கொண்டு
திமிரொடு நிமிர்ந்து நின்று
தமிழர்தம் மரபை நீயும் மார்பிலேந்து - தம்பி
தலைக்குமேல்த் தமிழைத் தாங்கி சமரில்நீந்து
நெடியவன் தமிழனென்று
கொடியவன் உணரவில்லை
பொடியவன் புரட்டுகளை புரட்டித் தள்ளு - தம்பி
வடவனின் வஞ்சகத்தை எதிர்த்து நில்லு
மூத்த இனமழித்து
முதல்நம் மொழியழித்து
சாதியும் மதமும் சொல்லிப் பிரித்தவனை - தம்பி
சீர்த்தவன் தமிழனென்றே சிரசுபிடி
பார்குலாம் பரந்திருக்கும்
பைந்தமிழர் நாமே யென்று
பட்டித் தொட்டியெல்லாம்
விழியோரம் விழுந்து
கிடக்கும் வினாக்களோடு,
கடந்து நடக்கும் - அழுக்கு
பிஞ்சுகள் என்றாவது
உம் மனம் பற்றியதுண்டா ?
வற்றிய வயிறோடு
கடவுளர் குடியிருப்பின்
கதவோரம் - கந்தல் உடுத்தியபடி
அம்மாவென உச்சரித்தபடி
நிற்கும் யாரேனும் - உம்
கால்களை நிறுத்தியதுண்டா ?
தடதடக்கும் புகை வண்டியின்
வயிற்றில் நின்றுகொண்டு
தொண்டை திண்டாட நின்றாடி
கானம் உதிர்க்கும் - பாரையிதுவரை
பார்த்திரா பாமரர்கள் யாரேனும்
உம் பார்வைக்குள் வந்ததுண்டா ?
ராட்சத ராட்டினங்களின்
காலடியில் நின்றபடி
பஞ்சுமிட்டாய் தின்றுதிரியும்
பிஞ்சுகளை - வெறித்தபடி
கையேந்தும் முகங்களில்
ஒன்றாவது - உம் கனவுகளின்
இறைவனை வேண்டி
வேண்டுதல்கள் வீணானபின்
இரை வேண்டி இரையாகும்
விலைமகள் பேசுகிறேன்,
காது கொடுங்கள் - கொஞ்சம்
கதைத்துவிட்டு தருகிறேன் !
கா"ரண"ங்களும்
மா"ரண"ங்களும்
உண்டெனுக்கு - வலிகள்பல
உண்ட எனக்கு !
விழுந்தேன் - எழவே
முடியாத ஆழத்தில்,
மாண்டு போவதைத்தவிர
மீண்டு போக வழியின்றி !
நான் படும் வேதனைகளை
கண் கொண்டு பார்க்க
இதயபலம் இல்லாத
செந்தழல் சூரியன்
காரிருருள் கரைந்து போவான் !
சாக்கடையைவிட கீழாக
எனநோக்கும் சமூகம்
தன்னுள் எத்தனை - என்
வாடிக்கையாளர்களை
சுமந்து நிற்கிறதென்பது
நானும் நானுமே
அறிந்த இரகசியம் !
பணமே என் நோக்கமெனில்
கல்லுடைத்து பிழைத்தி