உடைந்து கிடப்பது நம் பிழையல்லோ

நாப் பறையறைந்து
நாற்றிசையும் முழவறைந்து
உள்ளே உறங்கும் சிறுத்தையை உசுப்பிவிடு - தம்பி
உயர்வுத் தாழ்வு பேதம் நீக்கிவிடு

திரைபோ லெழுச்சி கொண்டு
திமிரொடு நிமிர்ந்து நின்று
தமிழர்தம் மரபை நீயும் மார்பிலேந்து - தம்பி
தலைக்குமேல்த் தமிழைத் தாங்கி சமரில்நீந்து

நெடியவன் தமிழனென்று
கொடியவன் உணரவில்லை
பொடியவன் புரட்டுகளை புரட்டித் தள்ளு - தம்பி
வடவனின் வஞ்சகத்தை எதிர்த்து நில்லு

மூத்த இனமழித்து
முதல்நம் மொழியழித்து
சாதியும் மதமும் சொல்லிப் பிரித்தவனை - தம்பி
சீர்த்தவன் தமிழனென்றே சிரசுபிடி

பார்குலாம் பரந்திருக்கும்
பைந்தமிழர் நாமே யென்று
பட்டித் தொட்டியெல்லாம் கூச்சலிடு - தம்பி
கட்டி முட்டியெல்லாம் நொறுக்கிவிடு

சாதித் தமிழ்சாதி
மதமும் தமிழேதான்
கடவுள்கூட நமக்குத் தமிழல்லோ - தம்பி
உடைந்து கிடப்பது நம் பிழையல்லோ...!


---------------நிலாசூரியன். தச்சூர்.

எழுதியவர் : நிலாசூரியன், தச்சூர். (12-Jul-15, 9:15 pm)
பார்வை : 186

மேலே