விடியல் வெகுதூரம் இல்லை

எரிமலை எவ்வளவு நேரம்தான்
அடங்கியிருக்கும்
கனன்று கொண்டியிருக்கும் அது
கட்டவிழும் நாள் தொலைவில் இல்லை

வெதும்பிக் கொண்டியிருக்கும் மனங்கள்
வெடித்துச் சிதறும் நாள்
வெகுதொலைவில் இல்லை

அடங்கியிருக்கும் புனல்
அணை உடைக்கும் நாள்
அருகில்தான் உள்ளது.

மேலும் வேண்டாம்
கீழும் வேண்டாம்
சமம் ஒன்றே போதும்

எவ்வளவு நாள் தான்-சாதி
எனும் முகமூடியால்
பயமுறுத்துவீர்கள்.
இருமனங்கள் போதும்
இழிந்த சாதிகள் தேவையில்லை.

பயத்தின் உச்சம் எதற்கும்
அஞ்சா நிலை
அந்நிலை அடைந்து விட்டோம்.
.
அரசியலை அசிங்க படுத்தும்
அசிங்கங்களை விரட்டும்
நாள் விரைவில்.
பொன்னான நாட்டை புண்ணாக்கும்
புண்'ஆக்கிகளை' விரட்டும்
நாள் விரைவில்.

அழகிய பூக்கள்
அமிலத்தில் அமிழ்வதை
தடுத்திடுவோம்
இழந்து கொண்டியிருக்கும் மனிதத்தை
மீட்கும் கடமை
இளைஞர்கள் நம் கையில்!

மதம் பிடித்திருக்கும் மனிதர்களை
மட்டம் தட்டுவோம்.

ஒட்டாயுதத்தை உபயோகித்து
ஒட்டுண்ணிகளை ஓட்டுவோம்
நாட்டை விட்டே!
வாக்குரிமை சாட்டையை சுழற்றும்
நேரம் தொலைவில் இல்லை

சூதாட்ட 20-20 ஐ விடுத்து
அக்னி நாயகனின் 20-20 ஐ
நோக்குவோம்
திரை மயக்கத்திலிருந்து விழித்தெழுவோம்

பெருச்சாளிகள் சுரண்டி கொண்டுதான் இருக்கும்
சிங்கங்கள் விழித்தெழும் வரை .,.,.,.......
விழி மூடியிருக்கும் சிங்கங்கள் விழித்தெழுவோம்
"விடியல் வெகுதூரம் இல்லை".

எழுதியவர் : சிற்பமாகும் சிற்பி (12-Jul-15, 5:37 pm)
பார்வை : 58

மேலே