கசாப்புக்கடை ஆடுகள் - வினோதன்

கசாப்பு கடை ஆடுகளை
பற்றிய கவிதை தாங்கிய
தாளொன்றை உண்ணாது
கடந்தன குட்டிகள்...

அதே தாளை கிழித்து
வடை குடித்த எண்ணெய்யை
குடிக்க பணித்தான்
வெட்டும் இடைவெளியில்
கசாப்பு கடைக்காரன்

எழுதியவன் நாவிற்கு
கொழுப்புக் கறி பிடிக்குமென்று
தேர்ந்தெடுத்து தட்டிட்டாள்
இல்லாள் இருமுறை

கடைசி வரை
நமக்காக போலியாகக்கூட
இறக்கப் படுவார்கள் என்
தெரியாமலேயே இறந்த
ஆட்டிற்கு என் இரங்கல்கள் !


- வினோதன்

எழுதியவர் : வினோதன் (9-Jun-16, 12:17 pm)
பார்வை : 177

மேலே