நீக்கமற நிறைந்துவிட்டாள்

கண் இமைக்க மறந்தேன்
கன்னியவள் அழகினைக் கண்டு
கன்னியவள் தாக்கினாள்
புன்னகை எனும் அம்பைக் கொண்டு
புன்னகை ஒன்று போதுமே
நெஞ்சில் அவள் குடியேற
நெஞ்சில் அவள் வந்துவிட்டாள்
நீக்கமற நிறைந்துவிட்டாள் !

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (9-Jun-16, 12:03 pm)
பார்வை : 68

மேலே