பாமோபாலாஜி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பாமோபாலாஜி |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 27-May-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 149 |
புள்ளி | : 54 |
நான் ஒரு உள்அலங்கார வடிவமைப்பாளன்.
அன்பு பிறரிடம் காட்டிடு
ஆற்றல் உன்னுள் வளர்த்திடு
இன்பம் கண்டு மகிழ்ந்திடு
ஈகை குணம் வளர்த்திடு
உண்மை ஒன்றே கூறிடு
ஊர் போற்ற வாழ்ந்திடு
எண்ணம் நல்லது கொண்டிடு
ஏற்றம் காண வகுத்திடு
ஒழுக்கம் உயிர் போல மதித்திடு
ஓய்வு இன்றி உழைத்திடு
ஒளடதம் அற்று உண்டிடு
தாய்நாட்டில் படித்து பட்டம் பெற்று
பணி நிமித்தமாக வெளிநாடு சென்று விட்டு
தாய்நாட்டை நிந்திப்பவர்களை
தேசத்துரோகிகளாகவே கருத வேண்டும்
ரெட்ட மாடு ஓட்டி
ஏரொன்னுல பூட்டி
வயலுக்கு வகுடெடுத்தேன்!
வலிச்சா மன்னிச்சுடு தாயேன்னு
வரப்பு மேல நின்னு வரம் கேட்டேன்
ஒன்னா கிடக்கும் பிள்ளைகளா!
பிரிய நேரம் வந்துருச்சு
பின்னி கிடக்கும் நாத்துகள
பிரிச்சு பிரிச்சு பதிய வச்சேன்
இடையில ஏதும் கள வளந்தா
இரக்கமில்லாம அழிச்சேன்
நீரும் உரமும் நேரத்துக்கு தந்து
காலநேரம் பாக்காம
கண் தூக்கம் இல்லாம
கண்டதுதான் கோலம்
கொண்டதுதான் வேடமுன்னு
நாத்த வளக்க நான் எளச்சேனே!
எவனோ பசியார என்ன எழச்சேனே!
அறுவட வந்துருச்சு
நட்டு வச்ச நாத்தெல்லாம்
நட்டம் வராம வெளஞ்சிருச்சு
கதிர அறுத்து களத்துல சேத்துட்டேன்
வெல ஒன்ன சொல்லி
வெளஞ்சத வித்துட்ட
சாதி பார்க்காது
தகுதி பார்க்காது
மொழி பார்க்காது
மதம் பார்க்காது ....
தோன்றுவதுதான் ...
நட்பு .......!!!
கண்ட நொடியில்...
தோன்றுவது நட்பு.....
கண்ட இடத்தில் ....
தோன்றுவது நட்பு ....!!!
நட்பின் காவியம் ....
காலத்தால் வாழ்கிறது ....!!!
மல்லிகையும் செய்தது மெல்லிய புன்னகை
என்னவள் சூடியதால்..!
உன்னைக் கண்ட பிறகு தான் நான் உணர்ந்தேன்
கண்ணால் காண்பது எல்லாம் பொய்யெ(ய)ன்று..!
குடை ஏன் அழுகிறது,
கூட இருந்தவன் பிரிந்ததற்கு-
அவள் தனியே மழையில்...!
எங்கிருந்து தான் வந்தாளோ?...
விதையாக நெஞ்சில் விழுந்து
மலராய் மலர்ந்து
காதலால் எனை தைத்தாளே......
இரவும் போனது பகலும் போனது
அவளின் நினைவுப் போகலையே...
விழி மூடத் தூக்கம் வருது
கனவிலும் செய்கிறாள் தொல்லையே......
எங்கிருந்து தான் வந்தாளோ?......
அவளைப் பார்த்த சில நொடிகளிலே
விழிகள் இரண்டும் மயங்கிப் போனதே...
திசைகள் தெரியாது நூலறுந்தக் காற்றாடியாய்
அவளைத் தேடியே பார்வைப் பறந்துச் சென்றதே......
யார்?... எனை அழைத்தாலுமே
அவள் குரலாய் செவிகள் கேட்குதே...
விருட்சத்தின் இலைகளாய் கூட்டமிருந்தும்
தனிமையில் இருப்பதாய் நெஞ்சமும் உணருதே......
தரையென்று நினைத்தே கால்கள்
நதிய
நெஞ்சோடு வாழ்ந்திடும் நினைவலைகள்
எத்தனை எத்தனை என் உயிரே...!
கண்ணோடு பேசிடும் பார்வைகள்
எத்தனை எத்தனை சொல் அன்பே!
முத்தத்தில் கவிதை படித்ததில்லை.
பிரிந்திட என்றும் நினைத்ததில்லை.
உன்னில் என்னை காண்பதனால்
மரணத்தை தாண்டி வாழ்ந்திடுவேன்.(பல்லவி)
மதியால் சதிகள் வந்ததம்மா
விதியால் காயம் தந்ததம்மா
நதியில் மீன்கள் அழுததம்மா
கதியில் கலங்கி தவித்தனம்மா
நினைவை கனவில் வாழ்ந்தோமே
உணர்வை நினைவில் சேர்த்தோமே
உன்னில் என்னை காண்பதனால்
மரணத்தை தாண்டி வாழ்ந்திடுவேன்(சரணம் 1)
காலத்தின் காயங்கள் ஆறிவிடும்
ஆறிய காயம் நினைவில் மறைவதில்லை
உதிரங்கள் சிந்தும் பூ நிலமே..!
வறியவன் நெஞ்சி
நண்பா!
வீடெது வீதியெது என்று கூடத் தெரியாமல்
செய்யும் மது உனக்கெதற்கு?
மணவாழ்க்கை கசந்திடுமே
மதுவிற்கு நீ அடிமையானால்!
மாலையிட்ட மங்கையின் மனம் நோகுமே
மதுவை நீ குடித்தால்!
சாதனைகள் புரியும் வயதிது உனக்கு
சாக்கடையைக் குடிக்கலாகுமோ?
மரணத்தின் பூட்டுதனை மது கொண்டு நெருங்குகிறாய்
பூட்டிற்கு சாவி மதுவென்று அறிந்திருந்தும்!
போதை மீறிப் போய்விட்டால்
பாதை மாறிப் போய்விடுமே!
உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்க
ஊசலாடிக்கொண்டு வருதல் உனக்குத் தகுமோ?
உன்னைச் சுற்றி ஒரு உலகிருக்க
உனக்குள் ஒரு உலகைத் தேடுகிறாய்!
உன் மக்களும் கெடுமே நாளை
உன்னைப் பார்த்து!
மூளைக்கு வேலை கொடு
மூலையி
தமிழ் படித்தேன் பட்டம் பெற்றேன்
மனு கொடுத்தேன் பணிக்கு
தகுதியில்லை என்றார்கள்
தமிழ் படித்த எனக்கு தகுதியில்லையோ?
தமிழ் படித்த(தா)ல் அவ்வளவு கேவலமோ?
தமிழனே! தலை நிமிர்ந்திடு!
தமிழைத் தலை நிமிர்த்திட!