புதிய ஆத்திச்சூடி
அன்பு பிறரிடம் காட்டிடு
ஆற்றல் உன்னுள் வளர்த்திடு
இன்பம் கண்டு மகிழ்ந்திடு
ஈகை குணம் வளர்த்திடு
உண்மை ஒன்றே கூறிடு
ஊர் போற்ற வாழ்ந்திடு
எண்ணம் நல்லது கொண்டிடு
ஏற்றம் காண வகுத்திடு
ஒழுக்கம் உயிர் போல மதித்திடு
ஓய்வு இன்றி உழைத்திடு
ஒளடதம் அற்று உண்டிடு