எங்கிருந்தோ வந்தாள்
எங்கிருந்து தான் வந்தாளோ?...
விதையாக நெஞ்சில் விழுந்து
மலராய் மலர்ந்து
காதலால் எனை தைத்தாளே......
இரவும் போனது பகலும் போனது
அவளின் நினைவுப் போகலையே...
விழி மூடத் தூக்கம் வருது
கனவிலும் செய்கிறாள் தொல்லையே......
எங்கிருந்து தான் வந்தாளோ?......
அவளைப் பார்த்த சில நொடிகளிலே
விழிகள் இரண்டும் மயங்கிப் போனதே...
திசைகள் தெரியாது நூலறுந்தக் காற்றாடியாய்
அவளைத் தேடியே பார்வைப் பறந்துச் சென்றதே......
யார்?... எனை அழைத்தாலுமே
அவள் குரலாய் செவிகள் கேட்குதே...
விருட்சத்தின் இலைகளாய் கூட்டமிருந்தும்
தனிமையில் இருப்பதாய் நெஞ்சமும் உணருதே......
தரையென்று நினைத்தே கால்கள்
நதியில் நடந்துச் செல்லத் துணியுதே...
தடுமாறி நீரிலே விழுந்தாலும்
கல்லில் விழுந்ததாய் தேகமேத் துடிக்குதே......
எங்கிருந்து தான் வந்தாளோ?......
தீயின் அருகில் நிற்கும் போது
அனலின் தாக்கம் பனியாய்த் தொடுது...
வாடைக் காற்று வீசும் போது
கோடை வெயிலாய் தேகம் சுடுது......
அவளின் நினைவு இருக்கையில்
பகலிரவை என்னுலகம் மறந்ததே...
அவளின் நினைவாய் இருப்பதால்
பசியும் தூக்கமும் தொலைந்ததே......
முள்ளின் மீது சாய்ந்தாலும்
சுகமென்றே நெஞ்சம் நினைக்குதே...
இந்த இரும்பு இதயமும்
அரும்புகளாய் தினம் பூக்குதே......
எங்கிருந்து தான் வந்தாளோ?......