தாகமாய் வந்த மோகம்
சிறகாய் விரியும் இமைகள்
தொட்டும் தொடாதும்
என் இளமையை இழுக்குதே......
அதனுள் உறங்கும் இரு விழிகள்
பார்வையிலேப் பற்றி எரிக்குதே......
செவ்வானம் போன்ற இதழ்கள்
தேன் பருகும்
வண்டுகளாய் மாறத் தூண்டுதே...
ஆசைகள் விதைத்து அனுவாகவும் சிதைக்குதே......
கால் கொலுசின் இசையோடு
நடந்திடும் பாதங்கள் பூக்களாய் இருந்தும்
இரும்பாய் இருதயம் நசுக்குதே...
அலைக் கடலில் சிக்கிய படகாய்
உள் நெஞ்சமோ?... தடுமாறுதே......
உதிர்ந்தப் பிறகும்
புது வாசம் வீசுதே
அவள் குழலில் நின்றாடும் பூக்கள்......
முழுமதி வானில் வந்தாலும்
அவளின் முகமே நிலவாய்த் தோன்றுதே...
முப்பது திங்கள் ஆனாலும்
அவளின் நினைவே
என் உயிராய் ஓடுதே......