ஆதலால் காதல் செய்வீர்

முகிலின் மழைத்துளி...
இரவின் பனித்துளி...
ஆதவனின் கதிரொளி...
அம்புலியின் குளிரொளி...
எல்லாம் உனக்கு ஒன்றுதான்......


முட்களைப் பூக்கள் என்றுப் பறிப்பாய்
உன்னை அது தைக்கும் போதும்
மயிலிறகு என்றே உணர்வாய்......


விண்மீன்கள் நிலவாகவேத் தோன்றும்
பகலிலும் அதனைத் தேடுவாய்......


மண் என்றாலும் மஞ்சமென்று
அதிலேத் தலைச் சாய்வாய்......


கசிந்து உருகும் அன்பில்
நீ நீராடி நனைவாய்...
சோகங்களை மேகங்களாய்
கவலைகளை கானலாய் கலைவாய்......


சோதனைகளை சாதனைகளாய் சுமப்பாய்
அதன் உயரம் குறைந்தாலும்
தாமரையாய் நீ மிதப்பாய்......


கார்காலம் ஆனாலும்
இளவேனில் ஆனாலும்
என்றும் உனக்கு வசந்தக்காலமே......

எழுதியவர் : இதயம் விஜய் (9-Jun-16, 2:20 pm)
பார்வை : 319

மேலே