யார் நீ என்னுள்
எழுதிட நினைத்தேன்...
எதையென்று தெரியவில்லை..
எண்ணங்கள் என்னையே கேட்டிட..
நால்புறம் இருக்கும்...
நட்பினை எழுதிடவா..
தூரத்திலிருக்கும்...
உறவினை எழுதிடவா...
என்னருகே இருக்கும்..
நினைவினை எழுதிடவா...
என்னுள் இருக்கும்...
உன்னை எழுதிடவா...
எதுவும் புரியவில்லை..
யார் நீயென்று அறிந்திடாமல்..