கண்ணீர் ஓவியம்
உயிரே உண்மைதான் ஒப்புக் கொள்கிறேன்;
உன் ஓவியங்கள் அழகானவை நீ அழிக்கும் வரையில்;
உன் விழிகள் தீட்டிய ஓவியங்களை எங்கணம் மறவேன்?
காதலால் தீட்டிய என்னை களைத்து விட்ட காரணம் என்னவோ?????
கனவுகள் கலைவதைப் போல் நம் காதலையும் நினைத்தாயோ???
கானல் உலகில் எங்கணம் தேடுவேன் உன்னை???
மூச்சிருக்கும் வரை ஏங்குவேன் உன் வரவை எண்ணி;
சீக்கிரம் வந்துவிடு அதுவரை உன் காதல் ஓவியம் கரைந்தோடும் என் கண்ணீரில்!