Karthika Pandian - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Karthika Pandian |
இடம் | : |
பிறந்த தேதி | : 22-Feb-1997 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-May-2016 |
பார்த்தவர்கள் | : 530 |
புள்ளி | : 226 |
என் இறந்த காலம் மிகவும் வறுமையானது,
ஆதலால்,
முடித்து வைக்கப் பட்ட என் அத்தியாயத்தை மீண்டும் தொடர்கிறேன்,
என் எதிர்காலத்தை வளமாக்க.
--இப்படிக்கு நான்.
மறுக்கப்படா காயங்களும்,
மறக்கப்படா ரணங்களும்,
மறைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன புன்னகை பூக்களின் வாயிலாக.
தெருஓர பிச்சைக்காரனைக் கண்ட ஓர் இளைஞனின் பெருமை_ என் தந்தை முதியோர் இல்லத்தில் நலமாக உள்ளார் என்பது.
எனை விரும்பி ஏற்றவர்களை விட வெறுத்துச் சென்றவர்களே அதிகம்,
இருப்பினும் விருப்பத்துடன் பயணிக்கிறேன் கடந்த பாதை மாறிடினும் காலம் மாறும் எனும் நம்பிக்கையில்.
ஆத்தா நான் அழுக,
ஆத்துல மீன் அழுக,
ஆவாரம்பூ அழுக,
பூப்போல பொறந்த மக போன தெச தெரியலியே,
நெல்ல குடுத்து கொன்னுப்புட்டு நித்தமும் சாகுறனே,
போக்கத்த வீட்டுல பொம்பளயா நான் பொறக்க,
வாக்கப்பட்ட பாவத்துக்கு வயித்துல நீ பொறந்த,
பால் குடிச்ச ஈரப்பச பாவிமக மறக்கலையே,
வயித்துல பொறந்த புள்ள வாழம போயிருச்சே,
நெஞ்சுல அனலடிக்க கண்ணுல நீர் வத்த பொம்பள பொழப்புல பொழுது விடியலயே,
ஆணா நீ பொறந்தா ஆளாம போகமட்ட,
பொண்ணா நீ பொறந்து பொதஞ்சதென்ன பூமிக்குள்ள???
பொன்னே பூந்தேரே,
பொத்தி வச்ச மல்லிகையே,
கண்ணே கற்பகமே கலங்காம நீ உறங்கு,
மானே மரகதமே மயங்காம நீ உறங்கு,
ஆத்தா நான் அழுக அசையாம நீ உறங்கு.
அன்பு கலந்த என் நினைவுகள் அவசரமாய் களைக்கப்பட கரணம் என்னவோ,
ஒரு வேளை அம்னிசியா ஆட்கொண்டதோ???
வானவன் நிலவை விவாகரத்து செய்தானாம் விளைவு அமாவாசையாம்.
என்னை தொட்டுச் சென்ற நீ விட்டுச் செல்லும் போது தான்
உணர்ந்தேன் உன் அன்பின் ஆழத்தை;
பிரிந்ததை மறந்தாலும் இணைந்ததை மறப்பாயோ?
பெண்ணே நீ மிகவும் அடக்கமானாவள்;
உண்மைதான்!
உணர்ந்தது கொண்டேன்;
உணர்த்திவிட்டாய் சில நாட்களிலேயே;
நாணம் பூத்த முகமது வெறுப்பில் வீழ்கிறது என்னைக் கண்டதும்;
வெறுப்பினையாவது தொடர்ந்து காட்டிவிடு;
அப்போதாவாது என் நினைவுகள் கொஞ்சம் மிஞ்சட்டும் உன் நெஞ்சில்.