விதி வழி

ஆத்தா நான் அழுக,
ஆத்துல மீன் அழுக,
ஆவாரம்பூ அழுக,
பூப்போல பொறந்த மக போன தெச தெரியலியே,
நெல்ல குடுத்து கொன்னுப்புட்டு நித்தமும் சாகுறனே,
போக்கத்த வீட்டுல பொம்பளயா நான் பொறக்க,
வாக்கப்பட்ட பாவத்துக்கு வயித்துல நீ பொறந்த,
பால் குடிச்ச ஈரப்பச பாவிமக மறக்கலையே,
வயித்துல பொறந்த புள்ள வாழம போயிருச்சே,
நெஞ்சுல அனலடிக்க கண்ணுல நீர் வத்த பொம்பள பொழப்புல பொழுது விடியலயே,
ஆணா நீ பொறந்தா ஆளாம போகமட்ட,
பொண்ணா நீ பொறந்து பொதஞ்சதென்ன பூமிக்குள்ள???
பொன்னே பூந்தேரே,
பொத்தி வச்ச மல்லிகையே,
கண்ணே கற்பகமே கலங்காம நீ உறங்கு,
மானே மரகதமே மயங்காம நீ உறங்கு,
ஆத்தா நான் அழுக அசையாம நீ உறங்கு.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (15-Feb-18, 11:20 pm)
பார்வை : 125

மேலே