துயில் களைதல்

நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வை
காலை எழுந்தவுடன்
முகம் சரி செய்யும் கண்ணாடி
செம்மை பூசிய இதழ்கள்
கண் மையிட்டு
காதுகளில் தொங்கும் வளையங்கள்
திரும்பி பார்க்க வைக்கும்
கொஞ்சு மொழி
தன்னை அழகாய்
அழகழகாய்
வெளிக் கொணரும் பாங்கு
என்னால் முடியும்
புரிந்து கொள்
நான் யார் என்பதையும்
நீ தான் செய்கிறாய்
கண் நீருக்கு விலங்கிட்டு
சுயமரியாதை காட்டும் அதை
நீவிர்
திமிர் என்று விளம்பினால்
மிகச் சரியே ..


-கார்த்திகா அ

எழுதியவர் : கார்த்திகா அ (16-Feb-18, 12:06 am)
Tanglish : thuyil kalaithal
பார்வை : 87

மேலே