உரைநடையை வெண்டளையில் உப்பில்லா மற்றிணித்து - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(கருவிளங்காய் காய் 3)

உரைநடையை வெண்டளையில் உப்பில்லா மற்றிணித்து
தருமவரின் உளறுதலைத் தான்பாட்டென் றேசொல்லல்
ஒருசிறிதும் பொருளில்லை உப்பில்லை சப்பென்றே
உருப்படாதி ருக்குதுபார் உளமுணர்ந்து சொல்லுவிரே!

- வ.க.கன்னியப்பன்

முதலில் வரும் காய்ச்சீர் நான்கடிகளிலும் ஒரே வகையாய் இருத்தல் வேண்டும், ஒலி சிறக்கும். ஓசை நயமிருக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Nov-24, 3:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே