கண்டபடி எழுதுறாங்க கண்டதையும் எழுதுறாங்க - எண்சீர் ஆசிரிய விருத்தம்

எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 அரையடிக்கு)
(1, 5 சீர்களில் மோனை)

கண்டபடி எழுதுறாங்க கண்டதையும் எழுதுறாங்க;
..கவிதையின்னு சொல்லுறாங்க கருத்துமில்லே ஒன்னுமில்லே!
கண்டுபிடித் துச்சொன்னாக் கழுதையின்னு திட்டுறாங்க;
..கச்சாமுச் சாவென்றே கத்துறாங்க நெனச்சபடி!
பண்டைவினை தானிதுவோ பார்த்தெனக்குச் சொல்வாயோ;
..பாசமொடு நேசமுந்தான் பக்கபலந் தாராதோ!
உண்மைநிலை அறிந்துசொல்வீர் உவகையொடு காத்திருக்கேன்;
..ஒப்பில்லா மணியேதான் உத்தாரந் தானுண்டோ!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Nov-24, 3:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே