இனிய குழந்தைகள் தின நல் வாழ்த்துகள்

பாலியல் வன்கொடுமை செய்து
குற்றுயிரும் கொலையுயிருமாய்
மருத்துவமனையில் தவிக்கும் பெண் பிள்ளைகளுக்கு...

இரவுப் பட்டினியால் உறக்கமில்லாமல் தவிக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு...

நிரம்பி வழியும் அனாதை இல்லங்கள்
அதில் தன் பெற்றோர்கள் யாரென்றே தெரியாமல் தவிக்கும் வளர்ந்தக் குழந்தைகளுக்கு..

புத்தகம் சுமக்கும் வயதில்
கல்லைச் சுமக்கும் குழந்தைத்
தொழிளாலர்களுக்கு...

படிக்க ஆசையிருந்தும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டுவேளை செய்து வறுமையினால் வாடும்
தன் குடும்பச் சுமையை குறைக்க உதவும் குழந்தைகளுக்கு...

கயவர்களால் கடத்தப்பட்டு அங்கங்களை வெட்டி
பிச்சை எடுக்க அமர்த்தப்பட்டிருக்கும்
பிஞ்சு நெஞ்சங்களுக்கு...

சீரான ஊட்டச்சத்து இல்லாமல் வளர்ச்சிக்குன்றி வாடும் குழந்தைகளுக்கு...

குடும்பத்தோடு கொத்தடிமைகளாக
கல்வியில்லாமல்
எதிர் காலத்தை தொலைத்துக்கொண்டிருக்கும் சிறார்களுக்கு...

யார்.... எப்படி... சொல்வது உண்மையான...

*Wish you Happy children's day*


*✍🏿 செல்வமுத்து மன்னார்ரஜ்*

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (14-Nov-24, 12:43 pm)
பார்வை : 33

மேலே