இட்லி பேசுகிறது

ஆதியிலே அரைக்கப்பட்டு
ஆவியிலே அவிக்கப்பட்டு
அவதரித்ததுமே…
முள்கரண்டியால் பிய்க்கப்பட்டு
மூவர்ணங்களில் முக்கியெடுக்கப்பட்டு
முப்பத்தியிரண்டால் சிதைக்கப்பட்டு
பிறவிப்பயனை அடைகிறேன்
வயிற்றுக்கு வாழ்க்கைப்பட்டு.
அலுத்துக் கொள்ளும் மனிதர்களே
ஆனந்தம் கொள்ளுங்கள்
என்னிலும் அதிகமாக
இம்சைப்படவில்லையென!

எழுதியவர் : ஜ. கோபிநாத் (14-Nov-24, 9:05 pm)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 24

மேலே