மயிலின் தனிமை

தினந்தோறும் விடியலை
இன்னிசையால் இசைப்பவள் நான்
அழகு தோகை மலரால் மனம் வருடுபவள் நான்
மாயக்கன்னனின் மகுடமாய் இருப்பவள் நான்
உயிர்த்துளியான மழைத்துளி மண்ணில் விழும் முன்பே - ஆனந்த நடனமாடி மழைத்துளியை மண்ணில் வரவேற்பவள் நான்
சுதந்திர நாட்டில் நான் சுதந்திரம் இல்லாமல் ஒரு கூண்டுக்குள் அடைபட்டதாலோ
குறைந்து கொண்டே போகும் என் இனத்தை பார்ப்பதாலோ
இரை தேடி எங்கும் அலைந்து திரிவதாலோ ஏனோ
நம் நாட்டின் தேசிய பறைவையாக பட்டம் பெற்றிருந்தாலும்
என் மனம் தனிமையில் தவிக்கிறது
தேசிய பறவை என்பதை விட குறைந்து வரும் எண் இனத்தை காத்து என் தனிமையை நீக்கி எல்லாவற்றையும் போல என்னையும் இன்பமுடன் என்னையும் வாழ வை இறைவா!!!