வானில வொளியில் நடக்கும் ஓவியம்நீ

நானறி வொளியில் நடக்கும்புத் தகமில்லை
வானில வொளியில் நடக்கும் ஓவியம்நீ
தேனிதழ் சிந்திடும் தெள்ளிய தீஞ்சுவைத்
தேனினையென் சிந்தனைப் புத்தகமும் சிந்திடும்

-----கலிவிருத்தம் அடிதோறும் வேறுபட்ட வாய்ப்பாடுகள்

நானறி வொளியினில் நடக்கும்புத் தகமில்லை
வானில வொளியினில் நடந்திடுமோர் ஓவியம்நீ
தேனிதழ் சிந்திடும் தெள்ளியதீஞ் சுவைமிகுந்த
தேனினை சிந்தனை புத்தகமும் சிந்துதுபார்

------விளம் விளம் காய் காய் என்ற ஒரே வாய்ப்பாட்டில்
அமைக்கப்பட்ட கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Nov-24, 6:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 34

மேலே