காகுத்தன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  காகுத்தன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  01-Aug-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Dec-2017
பார்த்தவர்கள்:  185
புள்ளி:  10

என்னைப் பற்றி...

பீஷ்மரின் அம்புப் படுக்கை
என் வாழ்க்கை.
தர்மன் என்ன?
கண்ணனும்
கைகட்டிக் கேட்கும்
உபதேசம்
என் எழுத்து!

என் படைப்புகள்
காகுத்தன் செய்திகள்
காகுத்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2017 11:41 pm

காதலுக்குக்
கண்ணில்லை என்று
யார் சொன்னது?

அதுதான் இருக்கிறோமே
நீயொரு கண்
நானொரு கண்!

-காகுத்தன்

மேலும்

காகுத்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2017 7:09 pm

உப்பு சப்பில்லை
நன்றாக உறைக்கிறது
வாழ்க்கை!

-காகுத்தன்

மேலும்

காகுத்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2017 11:25 pm

குடும்பம் விளங்கும் குலமும் விளங்கும்
கொடுமை கொடுமை கொடுமை -அடடா!
கரம்குவிக்க வேண்டாமோ பெண்ணென்று சொன்னால்
சிரம்தாழ்த்து கின்றாளே சீ!

ஆண்குடி யாலே அடியோடு பாழாகி
ஏன்குடி என்றே இரங்குகையில் -தேன்குடி
கொண்ட இதழார் மதுவிலே தள்ளாடக்
கண்டு பதைக்குதே நெஞ்சு!

ஆண்மைக்குப் பெண்மை நிகரென்று காட்டுகின்ற
பாண்மை இதுவோ புகலுவீர்! -நாண்மை
இழந்திட்ட பின்னவளைப் பெண்ணென்று சொன்னால்
அளந்தறுக்க வேண்டாமோ நாவு!

மதுவில் மயங்கிக் கிடப்பவர்க் காங்கே
மதியுமே வேலைசெய் யாதே!- பொதுவில்
சரிந்தாலும் ஆடை சதைப்பசி கொண்டோர்
உரிந்தாலும் இல்லை உணர்வு!

புதுமைப்பெண் பாடிய பாரதி எங்கே
மதுவில்பெண் தள்ளாடும்

மேலும்

காகுத்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2017 6:08 pm

எதைச்சொன்ன போதுமே எங்கள் உரிமை
அதைச்சொல்ல நீங்கள்யார் என்பாய் -அதன்பேர்
சுதந்திரம் அல்லடி முப்பத் திருபல்
உதிர்ந்திடும் சொன்னேன் உனக்கு

அங்கத்தைக் காட்டல் அசிங்கம் எனச்சொன்னால்
சங்கத்தைக் கூட்டிக் குரல்கொடுப்பீர் -எங்களுக்கு
மட்டும்தான் பெண்மை அவசியமோ ஆணின்றி
கிட்டுமோ தாய்மை உமக்கு?

இடைகாட்டு கின்றாய் இளம்வாழை கொண்ட
தொடைகாட்டு கின்றாய் முலையின் -எடைகாட்டு
கின்றாய் இனியென்ன மிச்சம்?ஒரு கையளவு
வந்து பிறந்தவழி தான்.

கம்பன் பிறந்தாலும் காமம் பிறப்பதன்றி
இன்பத் தமிழ்க்கவி தோன்றாதே -வம்பாக
என்னைப் படைத்துவிட்டான் இந்தக் கழிசடைப்
பெண்ணை கவிபாட வென்று!

நால்பண்பு சொன்னாரே நற்குட

மேலும்

காகுத்தன் - காகுத்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Dec-2017 7:31 pm

தீக்குளித்தாள் சீதை
புடமிட்டுக் கொண்டது
நெருப்பு!

-காகுத்தன்

மேலும்

நன்றி! 26-Dec-2017 4:56 pm
உண்மை . 26-Dec-2017 10:14 am
நன்றி நண்பரே! 26-Dec-2017 2:20 am
அருமை நண்பரே... 25-Dec-2017 7:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

இவர் பின்தொடர்பவர்கள் (21)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
மூமுத்துச்செல்வி

மூமுத்துச்செல்வி

தூத்துக்குடி
Jayanthi  A

Jayanthi A

Bangalore

இவரை பின்தொடர்பவர்கள் (21)

மேலே