சரண்யா கவிமலர் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சரண்யா கவிமலர் |
இடம் | : கேரளா |
பிறந்த தேதி | : 22-Nov-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 809 |
புள்ளி | : 92 |
எனக்கு சிறுவயதிலிருந்தே தமிழ்பற்று அதிகம். தமிழ் கலை விழாக்களில் பல நிகழ்வுகளில் பங்கேற்று பரிசுகளை எனதாக்கியுள்ளேன். கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒரு கலை. ஒரு கவிதைநூலை தமிழ் உலகுக்கு படைக்க விரும்புகிறேன். இதுவே எனது இலட்சியம். எனது திறமைகளையும்,படைப்பாற்றல்களையும் வெளிக்கொணற இந்த எழுத்து தளம் ஒரு கருவியாக இருக்கும் என நம்புகிறேன்.
நான் தனிமையில் இல்லை..,
உன் நினைவுகளுடன் உன் விழி மூட இவைகளுடன் கழிந்த இரவு..!
தனிமையில் இல்லை..!
உனக்காய் வெளிவந்த சில துளியும், கருவறைக்கண்ணீர் போல் இருள் மட்டும் அறிந்த "புனிதம்"..!
இரவெல்லாம் பகலாக..,
பகலெல்லாம் இரவாக..,
என் நாட்களெல்லாம் எப்படியோ கழித்து விடுகிறேன்..!
உன் கைப்பிடித்துப் பழகிய விரல்களுக்கு இன்று வெறுமையின் ரணமாய் ஒற்றைப் பயணம்..!
தந்தைமடி தேடும் உறவாய்.., அன்னை முகத்திற்கு ஏங்கும் உணர்வாய்...
அத்தனை உறவையும் நகலெடுத்துவிட்டு,, இன்று என் அத்தனை உறவும் கலந்த உன்னொருவனை மட்டும் தேடித் தவிக்கும் என் நாழிகைகள்..!
உன்னை எண்ணிய கணங்களின் இரவுநேரக் கண்ணீர் துளிகளை ஒட்டுமொத்த நதிகள் தத்தெடுத்துக் கொண்டன...!
பூவிழிகள் மலர்ந்த அழகினில்
புன்னகை இதழ்கள் விரிந்த பொழுதினில்
யாழ்வழி வந்த இசையினில்
ஒரு காதலின் ராகம் நெஞ்சை வருடுதடி !
என்னவளே...
எனை கடந்துசெல்லும்
எந்த பெண்ணையும்....
நான் திரும்பிப் பார்ப்பதே இல்லை
அவள் உலக அழகியாக
இருந்தாலும் கூட
உன் ஒருத்தியின் அழகு மட்டும்தான் எனை மீண்டும் மீண்டும்
திரும்பி பார்க்க வைத்தது...
அழகுக்கு இலக்கணம் உன்னிடம் மட்டுமே கண்டேன்...
எழுத்துக்கள் இல்லையெனில் என் பேனாவைவிடக் குறுகியிருக்கும் என் வாழ்நாளும்..!
சில ஆறுதல்கள் என்னுள் பிறக்கின்ற போதும்.., மரணிக்காத அவன் நினைவுகளிடம் மட்டுமே விலை போகிறது..!
பத்திரப் படுத்திய உணர்வுகளும்..,
ஆறாத காயங்களின் நகல்களும்..,
உணராத நிமிடங்களில் சிந்திய ஈரங்களும்..,
விட்டுவிட்டுத் துடிக்கும் சில நினைவுகளும்..,
ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் அவனும்..,
வெறுமைகளிடம் விலைபோன நாட்களும்..,
என அத்தனையும் மொழிபெயர்த்துவிட்டு..,
உறங்க நினைத்தது என் பேனா..,
எஞ்சிய வெள்ளைத்தாள்கள் விதவையாய்..!
உன் கைப்பிடித்துப் பழகிய விரல்களுக்கு இன்று வெறுமையின் ரணமாய் ஒற்றைப் பயணம்..!
தந்தைமடி தேடும் உறவாய்.., அன்னை முகத்திற்கு ஏங்கும் உணர்வாய்...
அத்தனை உறவையும் நகலெடுத்துவிட்டு,, இன்று என் அத்தனை உறவும் கலந்த உன்னொருவனை மட்டும் தேடித் தவிக்கும் என் நாழிகைகள்..!
உன்னை எண்ணிய கணங்களின் இரவுநேரக் கண்ணீர் துளிகளை ஒட்டுமொத்த நதிகள் தத்தெடுத்துக் கொண்டன...!
சில காயங்கள் கண்ணீராக.., சில ஏமாற்றங்கள் மௌனங்களாக.., செய்யப்பட்ட பிழைகளுக்கு பலனாய் கிடைக்கப்பெற்ற பரிசுகள்... அனைத்திற்கும் என் தன்மானம் ஒன்றை மட்டுமே பனையம் வைத்தேன்..., இன்று அதுவும் உண்மையில்லை என்றறிகையில் வாழ்க்கை என்னை ஏளனமாய் சிரிக்கையில் மரணம் கூட தூரமாகி என்னை வதைப்பதன் வன்மம் உணரமறுத்த கோதையாய்...!
உன் நிழலின் அருகாமையும் என் இதயக் கதவின் சாவியடி...
என் இரவுவானில்
தேயாத நிலவாய் வான் நிறைக்கும் கனவுக் காட்சியடி நீ...
தொலைதூரம் ஆனபின்னும்..,
மறந்துவிட மறுத்த கணங்கள்..,
மனதிற்குள் மட்டுமல்ல உதிரத்துளிகளிலும் உன் முகம் தான்.., காதல் என்பதை விவரிக்க எண்ணவில்லை.., ஒன்று மட்டு்ம் உணர்கிறேன்.., நீயற்ற ஒவ்வொரு நிமிடங்களின் நீளங்களை கண்ணீர் தான் ஆற்றிக் கொண்டன..!,
உன்மீது நானும் என்மீது நீயும் கொண்ட அன்பு மட்டும் நிஐம்..!
மனிதனின் பேராசையில் சிக்கி
.....தவிக்கிறது ......பூமி
அவன் வரிகளில் சிக்கிக்கொண்ட
என்னை போல் .....
அவன்ஒருவன் மனது வைத்தால் போதும்
விடிவு பிறக்கும் .....எனக்கு ...
பூமிக்கு????
இன்று உலக புவி நாள் ....22 .4 .2018
நேற்று என் வாழ்வில் ஒரு முக்கிய நாள் ....21 .4.2018
முன்தினம் நான் இப்புவிக்கு வந்த நாள் ....... 20.4.2018 .
தோற்றுப்போனேன் கோபப்படுதலில் முதன்முறையாக..,
என் ச௧ோதரா...உன்
நகைச்சுவை நயங்களால்..!
நெகிழ்ந்து நின்றேன் சற்றே..,
கவலைகள் மறந்திட செய்யும்
உன் யதார்த்தப் பேச்சுக்களால்..!
பூவுதிர்க்கும் புன்னகையில்
'விஷம்' என்ற உன் வார்த்தைகளில் உணர்ந்தேன்..,
தங்கையை சீண்டிப்பார்க்கும் அண்ணணின் குறும்புத் தனத்தை..!
காலையில் ஒரு காலை வணக்கம்...,
மதியம் உணவு முடிந்ததா என்ற வினவல்...,
மாலையில் வாக்குவாதங்கள்... என
அன்றாட நாட்குறிப்பில்
தவறவிட்ட நிகழ்வுகளும் பதிவாகியது
அவரவர் செல்பேசிப் புலனத்தில்..!
உன் அன்னை போல் உன் வரவை புவியும் எதிர்நோக்கிய நாள் இன்று..!
வெற்றிகள் குவியட்டும் வாழ்வில்
வசந்
எனக்கு சோறூட்ட -
நிலாவுக்கு ஒரு வாய் தந்தாய்
விண்மீன்களை -
கண் சிமிட்டச் செய்தாய்.
பக்கத்து பங்களா
கூர்க்கா - பூச்சாண்டியானான் !
கலா வீட்டு மீ... மீ...
என் தயிர் சோற்றில்
பசியாறியது.
உன் இடுப்பில் - அமரச் செய்து
காட்சிகளை -
விரிவாகக் காட்டினாய் !
சந்தையில் வாங்கிய -
சூடான கடலையை
ஊதி, ஊதித் தந்தாய்.
நான் சலிக்காமல் - இருக்க
இடையிடையே - என்
கன்னத்தில் முத்தமும் தந்தாய்
உன் முந்தானைப் பிடி -
எனது முதல் ஊன்று கோல்.
உன் சேலைத் தலைப்பு -
நான் விரித்த முதல் குடை.
உன் மடி - நான் உறங்கிய
முதல் பஞ்சு மெத்தை.
உன் விரல் பிடித்து
நடக்கையில் - நீ
நான் படித்த முதல் புத்தகம் !
சாலை விஸ்தரிப்பு
மரத்தை வெட்டினார்கள்
நூறு வயது தாண்டிய மரம்
இது என்ன
அங்கீகரிக்கப்பட்ட குற்றமா...?
இதற்கு இபிகோ இல்லையா
பாவம் மரம் ஏன் என்று
கேள்வி கேட்ட வாயில்லாமல்
உள்ளுக்குள்ளே அழுகிறது...
சிட்டுக்குருவிகள்
வீட்டின் முற்றத்தில்
கூடு கட்டி வாழ்ந்தது
குஞ்சுகளின் கீச் கீச்
சங்கிதம் காதுகளுக்கு
இனிமை
இன்று ஒன்றைக்கூட
காணவில்லை
ஒரு வர்கமே அழிந்து
போய்கொண்டிருக்கிறது
அழித்தது யார்
இதற்கும் இபிகோ இல்லையா
பாவம் குருவி எங்குப்போய்
முறையிடும்..
ஆறுகள் பாவம்
அதன் உடையெனும்
மணலை அள்ளி
அதை நிர்வாணமாக்கி
கொண்டிருக்கிறார்கள்
இதுவும் ஒரு ஈவ் டீசிங் குற்றம்
இதற்க்கான இ