உதிரக் கண்ணீர்
உன் நிழலின் அருகாமையும் என் இதயக் கதவின் சாவியடி...
என் இரவுவானில்
தேயாத நிலவாய் வான் நிறைக்கும் கனவுக் காட்சியடி நீ...
தொலைதூரம் ஆனபின்னும்..,
மறந்துவிட மறுத்த கணங்கள்..,
மனதிற்குள் மட்டுமல்ல உதிரத்துளிகளிலும் உன் முகம் தான்.., காதல் என்பதை விவரிக்க எண்ணவில்லை.., ஒன்று மட்டு்ம் உணர்கிறேன்.., நீயற்ற ஒவ்வொரு நிமிடங்களின் நீளங்களை கண்ணீர் தான் ஆற்றிக் கொண்டன..!,
உன்மீது நானும் என்மீது நீயும் கொண்ட அன்பு மட்டும் நிஐம்..!