சரண்யா கவிமலர்- கருத்துகள்

தங்கள கருத்துகளுக்கு நன்றி

தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி..!

பெண்மை என்பவள் இப்பிரப்சத்தின் கூறு ஆவாள்.. ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்பது நாமறிந்ததே.., ஆயினும் பெண்மை என்பது சாதாரணம் அல்ல.., இப்புவியின் உணர்வுகள், கலை, கனவுகள் என் அத்தனையும் பெண்மையால் தோற்றிவிக்கப்பட்டதே.., பெண்மை என்பவள் அனைத்திலும் உதித்த மாபெரும் சக்தி...! அப்பிரபஞ்சத்தின் யாதுமாகி நின்றவள் என்பதையும்.., பிய்த்தெடுத்தாலும் பிரளாத நியதிகள் பெண்மை என்பதை கூற விழைகிறேன்..

பெண்ணியத்தின் நிலைகள்.., தனக்கான இலட்சியத்தை அடைய முடியாத நிலையில் அத்தனையும் வெறுத்து விடுகிறது... தான் எட்டவேண்டிய இலக்குகளுக்கு பாதுகாப்பு என்பது பெற்றோரிடமிருந்து வரும் தடை..
பெண்மை என்ற காரணத்தால் பாதுகாப்பற்ற நிலைகளுக்காய்
உறவுகளிடம் வரும் தடை.. என அங்கேயே முடக்கப்படும் பெண்ணியக் கனவுகள்...
அனைவரையும் எதிர்த்து நம் சிறு கனவுலகில் வாழ்வதால் உறவுகள் யாரோவாகிடும் நிலைகள் தான் எஞ்சும்..
பெண்மையின் கனவுகளுக்கு தடைகள் பொறுப்பற்ற ஆண்கள் செய்யும் இழிவுகளால் உருவாக்கப்பட்டதே..!
உந்து சக்தி என்பது தன்னம்பிக்கை மட்டும் தான்.. என் தன்னம்பிக்கை எழுத்தில்... என்றாவது பெண்மைக்கான சுவடுகள் உதிக்கும்.. அதுவரை பெண்மைக்கான பயணம் தொடரும்..!

தங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் பல

இங்கு வார்த்தைகள் எதுவும் மனதிலிருந்து உதிப்பதில்லையே பலர் உள்ளத்தில்... மனதில் தோன்றும் அனைத்தையும் கூற இயலாமல் பிறர் மனம் சஞ்சலம் அடையுமோ என்ற எண்ணங்களில் அவ்வார்த்தைகள் ஒளிந்திடும்..!
அந்நிலைகளில் மனம் எண்ணும் உண்மைகள் மறைக்கப்பட்டு மனசாட்சியின் உறுத்தல்களுடன் வாழும் நிலையை கூற விழைகிறேன்..!

தங்கள் கருத்துகளுக்கு நன்றி..!

கற்பனையன்று தோழரே...,
இரவுப் பூக்கள் கதிரவனை வரவேற்கும் தருணம் அதிகாலை..! இரவுமலர்கள் வாடும் கணங்களில் காலைக் கதிரவன் உதிக்கும் அந்த நேரம் இங்கு உணரப்படுகிறது...!

தங்கள் கருத்துகளுக்கு நன்றி

நன்றி சகோதரரே..! இது என் சகோதரரின் படைப்பு..!


சரண்யா கவிமலர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே