வாழ்நாள்
நினைவுகளுடன் வாழும் ஓவியம் என் மனம்...
செதுக்கப்பட்ட எழுத்தும் சிதறிப் போய் பொருள் தரும் .., இமைமூடி உன் முகம் காண முற்பட்ட முடிவுகளில்..!
கருஞ்சிறைக்குள் வாழும் பறவைக்கு..,
கனவுகள் மட்டுமே கண்மூடும் வரை..!
முரண்பட்ட ஒளியும் நித்திரைக்குள் நீளும் கனவாய்..!
கண்ணோரம் நீ இருக்க கனக்கின்ற இதயமும் கற்பனைக்குள் தொலைய.., மரத்துப் போய்விட்ட இதயத்துடன் எண்ணப்பட்ட என் வாழ்நாட்கள்..!
நேசிப்பதாய் நடிக்கப்பட்ட தனிமை..!
மீண்டும் நினைவுகள் நிஐங்கள் பெறாது.., இனி என்னால் வரும் புன்னகையும் வெறுமை தான்...!