அவளும் நிலவும்
கண்ணே உன்னை என்னால் தொட்டு தொட்டு
முத்தம் தந்து இன்பம் தர முடியும்
ஆனால் நம் இருவர் இடையே தோன்றிய காதலை
உன்னாலும் எந்நாளும் தொட முடியாது
அது நம் உள்ளத்தில் குடிகொண்டுவிட்டது
அகக்கண்ணால் மட்டுமே பார்க்கக்கூட முடியும்
பரந்த நீலவானில் உலாவிவரும் சந்திரனை
வானம் ஒருபோதும் தொட முடியாது அது தொட
பார்க்க பார்க்க நிலா கிடைக்காது தப்பி ஓடுது
போல் தோன்றும் ஆனால் நிலா என்றுமே
வானில் வானில் உள்ளே இருக்கின்றது