கண்ணுக்குள்ளே காதலிக்கிறேன்

மனம் தேடும் கண்ணாலே
மயங்கியே போவேன் உன்னால
சிலை போல செதுக்கியவலே
சீக்கிரம் வாடி முன்னாலே

கண்ணுக்குள்ளே உன் வெச்சி
காதலிப்பேனே
கண்டாங்கி சேலையை வாங்கி
கட்டவைபேனே

பொண்டாட்டினு உன்ன சொல்ல
புருஷனு நீயும் சொல்ல
சந்தோசமா நாமும் இப்ப
சந்தைக்கு தான் போவோமடி

காற்றும் இங்கு சீரி பாய
உன் கண்டாங்கி சேலை கூட
கரையோரம் நடக்கயிலே
என் மேலே சாயுதடி

கரும்பு மஞ்சள் இணைந்திருக்க
சூரியனும் எதிரில் உதிக்க
பொங்கல் பான பொங்கி வர
புதுபொண்ணே உன்ன கானுமடி

அரண்மனையின் தூனை போல
உன் நினைவுகள் நின்றிருக்க
ஆசைகிளி எனை அணைக்க
ஆசையோடு வருவாய்யடி

புத்தர் கண்ணன் சித்தர் இங்கு
போதனைகள் சொன்னால் கூட
போதையாக உன்னை நினைத்து
புத்தி இழந்து போவேனடி

சாககூட தூண்டும் வார்த்தை
நீயும் சொல்லி போனா கூட
சாபம் என்று நானும் எண்ணி
சந்தோசமா போவேணடி

எழுதியவர் : கணேசன் நயினார் (31-Jul-19, 11:52 pm)
சேர்த்தது : Ganesan Nainar
பார்வை : 1844

மேலே