அபி கவிதைகள் 150
கவிஞர் அபி
ஆழ்மன வெளிப்பாடுகளின் கவிதைத் தந்தை,தமிழ்ப் படிமக் கவிதைகளின் பிதாமகர்,
========================================================
மாற்றல்
பின்னணி உண்டு
மாற்றிக் கொள்வோம்
உன்னுடையதை நான்
என்னுடையதை நீ
மாற்றிக் கொண்ட இடைப்பொழுது
பின்னணி இல்லாதது
இடைப்பொழுதுகளையும்
மாற்றிக் கொள்வோம்
உன்னுடையதை நான்
என்னுடையதை நீ
பின்னணிக்குத் தளங்கள் உண்டு
மாற்றிக் கொண்டபின்
மாற்றிக் கொள்வோம்
தளங்களை
தளங்களில் நடமாட்டங்கள் உண்டு
மாற்றிக் கொள்வோம்
நடமாட்டங்களை
நடமாட்டங்களில்
பின்னணி
சூழலாக
மாறியிருக்கக் கூடும்
சூழலில்
எனது உனது சாயைகள்
நிர்ணயம் நோக்கி
வீண்முயற்சிகளில்
அலைந்து திரியக் கூடும்
மாற்றிக் கொள்வோம்
சாயைகளை
எனது உனது இன்றி
எதாவதாகவோ
இருக்க நேரிடும்
மாற்றிக் கொள்வோம்
எதாவதுகளை
வேகம் வேகமாக
மாற்றல் நிரந்தரப் படுகிறதா
உடனே
மாற்றிக் கொள்வோம்
மாற்றல்களை
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 5:24 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
திங்கள், 6 ஏப்ரல், 2015
சுற்றி
செறிவூட்டியபடி
உன்னை நான் சுற்றிவருகிறேன்
இன்றுபோல் இல்லாமல்
இன்னொரு நாள்போல் இல்லாமல்
எங்கோ போய்க்கொண்டிருக்கும்
வெட்டவெளி
நின்று வேடிக்கை பார்க்க
உன்னை நான்
சுற்றி வருகிரேன்
உன்னைச் சுற்றி
வட்டங்கள் உருவானபின்
விலகிக் கொள்கிறேன்
இனி
வட்டங்கள்
செறிவூட்டியபடி
உன்னை சுற்றிவரும்
உன்னைச் சுற்றி
உன் செறிவு உருவானபின்
வட்டங்கள் விலகிக் கொள்ளும்
பின்
உன் செறிவு
செறிவூட்டியபடி
உன்னைச் சுற்றிவரும்
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:50 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
மாலை -- அடியில்
காடுகளுக்குள்ளிருந்து
தப்பி வந்தன ஓடைகள்
நீருக்கடியில்போய்
நினைவுகள் வொளிந்து கொண்டன
புகை வராதபடி
பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தன
கரையில் சவுக்குத் தோப்புகளிடம்
அச்சம் கொண்டிருந்தன
சவுக்குத் தோப்புகள்
வேறு கவனமின்றி
வழிவெரியாத கூச்சல்களை
நிர்வாகம் செய்துகொண்டிருந்தன
00
அஸ்தமனக் கதிர்
ஊடுருவிப் பார்த்தபோது
நீருக்கடி நினைவுகள்
தம் உட்புறத்தைச்
செண்டடைந்திருந்தன,
எண்ணத் தொலையாத
தமது பிம்பங்களை
விட்டுச் சென்றிருந்தன,
காடுகளிடையே ஊர்ந்து பரவிக்
கதறித் திரிய
00
இப்போது
சல்லடையில் சலித்து இறங்கிய நுட்பங்களாக
பூமிக்கடியில்
என் இயக்கங்கள்
இயக்கங்களின்
தரைமட்ட பிம்பமாக நான்,
காடுகள் ஊர்ந்து பரவக்
களமாக
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:43 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
மாலை -- திரும்புதல்
புரண்டு கடுக்க இடமின்றி
ஒற்றையடிப் பாதை
சலிக்கிறது
கடந்துபோன காலங்களின்
சுவடுகள் மீது
கரித்து வளரும் புல்
00
திரும்புதலின் குற்றோசைகள்
படிந்து இறங்கி
அடிமண்ணின் உளைச்சலில்
புழுங்கி அவியும்
இது எப்படித் திரும்புதல் ஆகும்?
ஏதேதோ மூலைகளைப்போய் விழுங்கி
வெடித்து
வேறாகி வருவது
திரும்புதலா?
00
வாசனைகள் இருண்டு
அதனாலேயே
வடிவம் பெறுகின்றன
ஆடுகள் மலையிறங்கித்
தலைதாழ்த்தி வருகின்றன
வானம் சுற்றிலும்
வழிந்து இறங்குகின்றது
பேச்சுக்கு மிந்திய திருப்பம்
தயக்கங்களால் நிரம்புகிறது
இனிவரும் நூற்றண்டுகளில்
இந்த சதுக்கம்
உவமை வெளியாக
உறைந்து வெளிவரும்
00
வந்தயிற்று
அதோ தொலைவில்
விளக்குப் புள்ளிபளைத்
தன்மீது தரிக்கும்
உவரின் மாலை
இங்கே என்னருகே
எனது மாலை
பிரபஞ்ச சோகம் திளைத்து
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:38 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
மாலை -- என்மலை
வாசலில்
சிறுசிறு சந்தடிகளுடன் இசைந்து
வெளிச்சம் குறைந்துகொண்டுவரும்
தொடுதல்களைக்
கணக்கிட்டுக்கொண்டிருக்கும் இருப்பு
மங்கியும் தெளிந்தும்
ஒரு நிலைடற்று இருக்கும்
வெளியேறத் துடிப்பேன்
ஆனால் எப்படி?
கதவு சுவர் கூரை எல்லாம்
வெளியேறி மறைந்து போயிருக்கும்
வெளியேறுதல்
இல்லை என்று ஆனபின்
எனக்காகக் காத்திருந்த என்மலை
சற்று அசைந்து
குவடுகளால்
எனதொரு எல்லையை வருடும்
இங்கே படரும் இருளைச்
சிறிது சுண்டினால் கூட
என்மலை எனக்குப் பதில்சைகை தரும்
என்னைச் சுற்றி நிரம்பும்
காட்டுக் களிப்பு
இருப்பின் அனிச்சய பாவத்தில்
இது எது ஒரு சுகம்,
கண்பார்க்க எட்டித் திரியும்
ஞாபகம்போல்.
00
இப்படித்தான் என்று
நிதானமாகப்
பிறந்துகொண்டிருப்பேன்
எனது மலை வேரின்
ஒரு சிறு நுனியிலிருந்து
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:33 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
மாலை -- காத்திருத்தல்
விஷப்புகை மேவிய வானம்
மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது
அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு
மின்னி இடிந்து
வெறியோடு வருகின்றன
அல்ல அல்ல அல்ல என்று
பொழிந்து பிரவகிக்க
அழித்துத் துடைத்து எக்களிக்க
வருவது தெரிகிறது
அடர்வனங்களின்
கூர்க்கும் நெடுக்குமாக
ஆவேசக் காட்டறுகள்
பதறி ஓடி
வாழ்வைப் பயிலும்
உண்டு -- இல்லை என்பவற்றின் மீது
மோதிச் சிதறி
அகண்டம்
ஒரு புதிய விரிவுக்குத் தயாராவது புரிகிறது
00
காத்திருக்கிறேன்
இதுவே சமயமென
எனது வருகைக்காக
என் குடிசையில் வாசனை தெளித்து
சுற்றிலும் செடிகொடிகளின்
மயக்கம் தெளிவித்து
அகாலத்திலிருந்து
இந்த மாலைபொழுதை விடுவித்து --
காத்திருக்கிறேன்
மறு புறங்களிலிருந்து
வெற்றி தோல்வியின்றித் திரும்பும்
என் வருகையை நோக்கி
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:31 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
மாலை -- மாற்று`ருவம்
வீட்டு வாசலைத்
தொட்டுத் ததும்பிய மழைவெள்ளம்
முன்பொரு சமயம் கேட்ட
நள்ளிரவு ஒப்பாரிக் குரல்
கரைந்திருந்த்தது அதில்
மூழ்கினவை என
ஆளற்ற
பேச்சுக் குரல்கள்,
மழையோசையுடன் போட்டியிட்டுக்கொண்டு
நனைந்து
மாற்றுடையின்றி
மாற்றூருவமு மின்றி
இருந்தேன்.
ஓயாது தர்க்கிக்கும் தூறல்
கசங்கிக் கலைந்து கிடக்கும்
நாட்களின் குவியலிலிருந்து
எழும் புழுங்கள் வெப்பம்
இதவு
மாட்டுக் கொட்டகையிலிருந்து
சிற்றூருளை உராய்ந்துகொண்டு வரும்
பெருமூச்சு
ஆசுவாசம்
தலைப்பில்லாத ஒரு தவிப்பு
தவிப்பின் தனி இதம்
நனைந்து
மாற்று இடமில்லாதிருந்த
என் மாலையைப் பற்றிக்கொண்டு
மாற்றூருவம் இல்லாதிருந்த நான்
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:29 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
மாலை -- பரட்டை
நெறுனெறுவென்று பேசும்
ஆடிமாதம்
மூரைகள் பறக்கும்; கூடவே
கூரைகளின்கீழ் நெரிந்து கிடந்தவை
என்றும் பேசியிராததப்
பேசிப் பறக்கும்
செம்புழுதி கலைந்து சிவக்கும் என்
சுழற்சிகள்
கண்காதுகளில் நிறைகின்றன
00
ஒருதுகள் மிஞ்சாமல்
பறந்து போய்விட்ட
முதிய பொட்டல்வெளி
மெல்லிய இருள் விரித்து,
'அமர்ந்து பேசலாம் வா'
என்கிறது
பரட்டையாய் வறண்ட மாலை
இட்டுச் செல்கிறது
நான் திரும்பும் போதெல்லாம்
வழிவிட்டு விலகி
'முன்பின்கள் கலைந்து
முறை என்று ஆகிய பரப்பின்மீது
சொல் கலைத்து வீசிய சூரையை
அளந்து பேசுவதற்கா?
வரமாட்டேன்'
ஆயினும்
பரட்டியோடு மட்டும் பேச்சு
எனக்குண்டு
சுத்தமாய் வெறுமையாய்க்
குருட்டொலிகளால் ஆன பேச்சு
00
குருட்டொலிகளின்
அலை வீச்சில்
யுகயுகமாய்ச் சேகரமான
வேறோரு
கருமணல் விரிவு
கலையாதிருப்பது
கருமணல் விரிவு மட்டுமே
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:28 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
மாலை -- தணிவு
காடு எரிந்த கரிக்குவியலில்
மேய்ந்து களைத்துத்
தணிந்தது வெயில்
என்னோடு சேர்ந்து
இதொ இதொ என்று
நீண்டு கொண்டே போன பாதைகள்
மடங்கிப்
பாலையினுள், முள்வெளி மூழ்கச்
சலனமற்று நுழைந்துகொண்டன
விவாதங்கள்
திரும்புவதற்க்கு அடையாளமிட்டுப் போன
வழிகளில்
அறைபட்டுத் திரும்பின
முடிவுகள்
அரைகுறைப் படிமங்களாக வந்து
உளறி மறைந்தன
பசியும் நிறைவும்
இரண்டும் ஒன்றாகி
என் தணிவு
வேறோரு விளிம்பைச்
சுட்டிக் காட்டாத
விளிம்பில்
தத்தளிப்பு மறைந்த
என் தணிவு
நிகழும் போதே
நின்றுவிட்ட என் கணம்
குளிரத் தொடங்கியது
என் தணிவைத் தொட்டு
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:26 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
மாலை -- எது
தூசி படிந்த புளியமர வரிசையை
வைதுகொண்டே
மணலில் வண்டியிழுக்கின்றன மாடுகள்
வண்டுகளும் பறவைகளும்
தோப்புகளுக்குள்
இரைச்சலைக் கிளறி
எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன
இருண்டு நெருங்கி வளைக்கும்
மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில்
இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித்
ததும்புகிறது
என்வலி
பொழுது நிரம்புகிறது
ஒரு இடுக்கு விடாமல்
0 - 0
தூசி படிந்த இரைசலுக்கடியில்
சாத்வீக கனத்துடன்
இது எது?
இருள் இருண்டு காட்டிய வெளிச்சத்தில்
இடறாத என் பாதங்களினடியில்
இது எது
என் சாரங்களின் திரட்சியுடன்
வலியுடன்
அலங்கரித்த விநோதங்களை
அகற்றிவிட்டு
எளிய பிரமைகளின் வழியே
என்னைச் செலுத்தும்
இது எது?
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:24 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
மாலை -- த்வனி
நான் வெட்டவெளியாகுமுன்பே
என் தீர்மானங்கள்
கசிந்து வெளியேறிப் போய்விட்டதை
உணர்ந்தேன்
ஆ! மிகவும் நல்லது
அவசரமில்லாத ஓடைகள் நடுவே
கூழாங்கற்களின் மீது
என் வாழ்வை
மெல்லத் தவழவிட்டேன்
வீட்டு முற்றத்தில்
கூழங்கற்களின் நடுவே
ஓடைகளின் சிரிப்போடு
வெளி-உள் அற்று
விரிந்துபோகும் என் வெட்டவெளி
0-0
விட்டுப்போன நண்பர்கள்
அர்த்தங்களைத் திரட்டி சுமந்து
வெற்றியு உலா போகிறார்கள்
விளக்கு வரிசை மினுமினுக்க
உண்மையின்
அனைத்துச் சுற்றுவாசல்களிலும்
புகுந்து திரிந்து
திருப்தியில் திளைக்கும்
என் நண்பர்களுக்கு,
கிடைக்கும் இடைவெளிகளை எல்லாம்
தம் கையிருப்புகள் கொண்டு நிரப்பும்
அவர்களுக்கு
என் வெட்டவெளியைக் காட்டமாட்டேன்
0-0
வெறுமைப் பாங்கான
எனது வெளியில்
ஒளியும் இருளும் முரண்படாத
என் அந்தியின் த்வனி
த்வனியின் மீதில்
அர்த்தம் எதுவும் சிந்திவிடவும்
விடமாட்டேன்
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:22 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
மாலை - நிலவிரிவு
வலித்தது என்று
மாலையைக் கீழே இறக்கிவிட்டிருக்கிறோம்
வெறித்த
பாலைப் பொழுதைப்
போர்த்துக்கொண்டு கிடக்கிறோம்
செம்மண் பரப்பை
குத்துச்செடி விரிவை
பாறைக் கும்பலை
மேலிட்டு
மூடிப் பரப்பிக்கொண்டு கிடக்கிறோம்
அருகே
எட்டித் தொடும் எளிமையுடன்
கடல்னடுத் தனிமையை
இணைத்துக் கிடத்தியிருக்கிறோம்
சாவு சொன்னதை
ஸ்வரப் படுத்திப்
படுக்கை வசமாக
விரிய விட்டிருக்கிறோம்
அடிவான உராய்வில்
முகம் பதியக்
கடப்பதில் திளைத்து
நில விரிவாகி,
சுற்றுமுற்றுகாகி,
இருக்கிறோம்.
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:16 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
மாலை -- பயில
கிடை வரிசையில்
நிழல்கள் நீண்டு நெளிந்து
தடமின்றிப் புதைந்துவிடும்
இப்போது அவை
வேறு மொழியில்
வேறு தரைகளில்
அமிழ்ந்திருக்கும்
கரையோரத் தென்னைகளுடன்
நட்பு எளிமை துறந்து
ஆறு
தன் அன்னியம் கொண்டு இருளும்
திசைனினைவு
விடுபட்டு ஒடுங்கி
எது இறுதியோ அதைத்
தொட முடியாதெனத் துக்கித்துத்
துழாவிப் போகும்
0-0
உருவினுள் மறைந்து
உருவிழந்த
மாலையைப்
பயின்றுகொண்டிருபேன்
மணல் பிசைந்து
மாலையின் துடிப்பைக் கணிப்பேன்
பயில --
அரவமற்ற
என் மூலைகளினுள்
உரிஞ்சப்படுவேன்
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:12 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
மாலை -- காட்டு மலர்ச்சி
திரியில் சுடர் இறங்கிக்கொண்டிருக்கிறது
கதைகள் தீர்ந்துபோயிருந்தன
முகங்களில் சூழலின் கனம்
மெலிதாக அசையும் வீடுகளும்
தடதடக்காது நகரும் தெருக்களும்
செயற்கைச் சுவாசத்துடன்
வாசற் கோலங்கள்
கூட்டித் தள்ளிய குப்பைகளிடையே
உப்பி ஊற்க் கிடக்கும் வார்த்தைகள்..
0-0
மறுபடி மறுபடி வருகிறேன்
எங்கும் போயிருக்காமலே
இங்கிருந்து
இங்குபோய்த்
திரும்பி
இதோ இந்த மாலையும்
பீடிகைகளின் மீது
பற்றிப் பிடித்து எரிகிறது
சடசடத்து எரிவதன்
புகைச்சுகம்
0-0
தீர்ந்துபோன கதைகளின் எல்லையில்
இருள் முயலும் ரகசியம் எது?
புரிபடவில்லை -- எனினும்
முயல்வது கண்ட கிளர்ச்சியில்
கண்ணீரில் தொடுப்பத்ற்கில்லாத
கட்டு மலர்ச்சி
அதுகொண்டு
ஒரு சிறு சைகையும்
எண்ணத் துகளும்கூட
இடையிடுவதற்கின்றி
ஒன்றாகிவிட்டோம்
நானும் மாலையும்
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:11 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
மாலை -- காலியிடம்
உண்மை
தன் பழைய இடத்துக்குத்
திரும்பி வந்து விட்டது
எப்போதும் காலியாயிருக்கும் இடம்
அது இல்லாத இடம் எது
என்பது பெரியோர் வாதம்.
வாதம் தெரியாமல்
எவர் பேச்சையும் கவனிக்காமல்
இதையே கவனித்திருக்க நேர்கிறது,
திரும்புவதை, திரும்புவதை மட்டும்.
புழுதிப் படலத்தோடு மிதந்துபோகும்
இடைச்சிறுவர்கள்
பசியின் பார்வையில் எரியும் விறகு
கடைசி மஞ்சள் கிரணத்தின்
தயங்கிய மூச்சு
--எதுவாயினும்
என்மூது பட்டவுடன்
விலகிப் போகின்றன, கவனம் கவராமல்.
இடம் இல்லாதிருந்ததில்
இடம் பரவிக்கோண்டது,
காலியிடம்
வாசலில் தொடங்கி
வானம் அடங்கி
தான் இன்றி இருண்டு கிடக்கும்
மனசின் வெளிவரை
எங்கும்
காலியிடம் காலியிடம்
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:06 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
மாலை -- விலகல்
மீண்டும் மீண்டும் வாய்ப்பது
இதே திசை
எட்டிலும் பத்திலும் அடங்காத திசை
விலகலுக்கென்று உள்ள திசை
அகன்று கறுத்த
தனிமையின் மீது
திட்டுத் திட்டாக
முள்வெடித்த பசுமை
இப்போதுதான் -- சமீபகாலமாக
உர்ள்வதை நிறுத்திவிட்ட பாறைகள்
சிறுசிறு இடைவெளி விட்டுச்
செருகியிருந்தன
0-0
இந்த இடத்திலிருந்து
இந்த விதமாய்ப் பார்க்க
எல்லாம் --
பாறை பசுமை எதுவாயினும்
தம்மை விட்டு வெளியேறி
விலகிப் போவது
தெரிய வருகிறது
பொழுது துறந்து
அலயவும்திரியவும்
எங்கும் அடையாதிருக்கவும்
வாய்க்கிற திசை இதுதான்
0-0
முள்வெடித்த பசுமையும்
செருகியிருக்கும் பாறைகளும்
ஏதோ இது நிலம்தான் என்று காட்ட,
நிரந்தர விலகலில்
என்னை நீடிக்கவிட்டு
எல்லா நேரமும்
என் பின்--முன் வரும்
என் மாலை சொல்கிறது
இது ஏதோ திசைதான் என்று
விலகலுக்கென்று உள்ள திசை
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:05 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
மாலை -- குழப்பம்
குழப்பம் என்றான் நண்பன்
எது அவனைச் சூழ்ந்து நெருங்கீருக்கிறதோ அதனை
ஊடுருவியபோது
உண்மைதான் அவன்கூற்று
என்று தெரிந்தது
அவன் வீட்டவௌ வேறுமாதிரி.
பளபளவென்று நிச்சயங்களைத் துலக்கி
மாலை வெளக்கொளியில்
மின்னச் செய்கிறார்கள்
இருள் கலவாத வெளிச்சம் பேசுகிறார்கள்
நூல் பிடித்து அமைத்த
மனசின் சந்திகளில்
உரக்கச் சந்தித்துத்
தழுவிச் சிரித்து மகிழ்கிறார்கள்
பார்க்கக் கண் தேவையில்லை,
பார்ப்பதற்கும் இல்லை
என்றீருக்கும் ஒன்றை,
மாலைச் சலனங்களிடையே
சிறு ஒலி எழுப்பித் திரியப் பார்த்ததாக
இமைகளைக் கவித்துக்கொண்டு
பரவசத்துடன் சொல்கிறார்கள்
சந்தையிலிருந்து திரும்பும் கால்களில்
சாமர்த்தியம்
வழினிழலில் அமர்ந்து
முனைகள் சந்திக்க
வளையம் வரையும் கைகளில்
லாவகம்
புள்ளீயிலிருந்து புள்ளிக்கு
இடைக்கணத்தில்
அபார துல்லியம்
யாரும் யாரும்
எதுவும் எதுவும்
தெளிவே அவர்களுக்கு;
குழப்பம் என்கிறான் நண்பன்
குழப்பம் என்கிறான்
மாலையின்
இறுகலுக்கும் இளகலுக்கும்
நடுவில் நின்றபடி
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 6:58 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
மாலை -- ஆறுவயதில்
நடுவில் நான்
நீங்கள் சுற்றிலும்
பதற்றம் இல்லைபோலப்
பாவனை செய்தோம்
சந்திப்பின் தாங்கொணாத வதை.
நம்மைப் பிணித்தது ஒரு விதி
மாலைக் காற்றைக் கொண்டு
காற்றின் ஓரமாக
யாருக்கும் காட்டப்படாத
பாதைகள்
விரைந்தோடின;
என் விரல் ரேகைகளில் வந்து முடிந்தன
ஆள் புழக்கமற்ற என்
பாதைகளைக்
கிழித்துக் குதற
வேட்டைவெறி கொண்டிருந்தீர்கள்
பாறைகளை
ஊதி உருட்டித் தள்ளும்
என் மலைகளின் மீது
என் கனல் சுற்றிவந்தது
கனல் மீதேறவும்
கைகால் வீசினீர்கள்
என்ன தெரியும் எனக்கு
அந்த ஆறு வயதில்?
எனது தூரத்தைத் தாண்டிய பார்வையைத்
தொடராது விட்டுவிட,
சூழும் கிறுக்கல்களிலிருந்து விடுபட்டு
மையம் என ஒன்று இன்றி
இருக்க
என்ன தெரியும்?
கனல் மீதேறக்
கைகால் வீசிச்
சுற்றிலும் நீங்கள்
நடுவில் நான்
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 6:57 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
மாலை -- என் வடிவு
வானம் தெரியும் நடுமுற்றம்
மரக்கட்டிலில் நெருங்கி அமர்ந்து நாங்கள்
சமயலறைச் சுவருக்குப்போக மிஞ்சிய
கொஞ்சம் சிமினி விளக்கு வெளிச்சம்
எங்களருகில், பராக்குப் பார்த்துக் கொண்டு
அம்மா சொன்ன கதை
வழக்கம் போல
மெல்லிய திரைச் சீலைகளுக்குப் பின்னிருந்து
நிகழ்ந்து காட்டியது
திரவமாகித் ததும்பிய நான்
என்னிடம் இருந்தால்
என் வடிவில் இருந்த நான்
மாலையோடு பேசித் தளிர்க்கும்
கதை
என் வடிவில் இருந்த கதை
யோசிப்பும் நின்றுபோன
மௌனம்
என் வடிவில் இருந்த மௌனம்.
இடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 6:54 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிதைகள்
மாலை -- சருகுகளடிப் பொழுது
சருகுகளினடியில்
புதையுண்டு
லேசாக மூச்சுமுட்டிய
சுகம்,
எல்லாவற்றாலும் தொடப்பட்டு
எதையும் தொட இயலாதிருந்ததன்
மருட்சி,
வலிக்காமல்
தொற்றிக் கிடந்த துக்கம்,
அறியாமையின் மீது
பதியப் பதிய
ஊர்ந்து திரிந்த பரவசம்,
பாட்டிமார் கண்ணிடுக்கில்
விரல் துடிப்பில்
சுருக்கங்களோடு கூடியிருந்த
எளிய அருமை ...
அருமையாய்க் கழிந்தது
சருகுகளடிப் பொழுது
0-0
மறதியின் மதிப்பு உணராமல்
அதன் அரைவட்ட மூடிக்குள்
உலகளாவியிருந்திருக்கலாம்
பெயர் தெரியாத பறவிகளின்
அந்திப் படபடப்புகள்
உடம்பை ஊடுருவிப் போயிருக்கலாம்
சிறுமணிகளின்
இடையற ஒலிபோல் ஒரு கதகதப்பு
அஷ்தமனம் உதிர்த்த சருகுகளடியில்
படர்ந்திருக்கலாம்
0-0
எவரையும்
என்னையும்
நுழைய விடாதிருந்த
பிரக்ஞையின் வெற்றிடம்
மாலையின் தடவலில் இணங்கிக்கொள்ள
--அருமையாகவே கழிந்தது
சருகுகளடிப் பொழுது.