புட்டு மூஞ்சி மச்சான்
நான் ஒரு இளம் ரவுடிங்க. ஒடுங்கிய முகம்.
என் பேரு 'புலவேசு'ங்க. எங்க பகுதில
என்னை எல்லாரும் ஒடுக்கு மூஞ்சி
புலவேசுன்னு தான் சொல்லு வாங்க.
அந்தப் பேரு எனக்குச் சுத்தமா
பிடிக்கலிங்க. எங்க பகுதியில நான்
ரவுடித்தனம் செய்யமாட்டேனுங்க.
வேற பகுதிகளுக்குப் போயி தனியா
வர்ற பள்ளிக்கூடத்துப் பிள்ளகளை
மிரட்டி அவுங்கிட்ட இருக்கிற சில்லறைக்
காசுகளை புடுங்கிக்குவேன். பெண்
குழந்தைகளா இருந்தா மிரட்டி கொலுசைப்
புடுங்கிக்கவேனுங்க
என்னைப் பற்றித் தெரிந்து கொண்ட
பக்கத்துப் பகுதி பழம் பெரும் ரவுடி
பஞ்சாஙகன் அவரது
மகள் மங்களாவை அவரோட
செலவிலேயே எனக்குத் திருமணம் செஞ்சு
வச்சாருங்க. நாங்கள் குடியிருக்க ஒரு
சிறிய வீட்டையும் திருமணப் பரிசாக்
குடுத்தாருங்க.
எனக்கு ஏன் அவரது மகள்
மங்களாவைக் கல்யாணம்
செஞ்சுவச்சாருனு சொல்லட்டுங்களா?
மங்களா நிறம் கரும்பலகை நிறம். குண்டு
மூஞ்சி. அவளோட கன்னம் (இ)ரண்டும்
புடைத்துக் கொண்டிருக்கும். அது மாதிரி
கன்னம் உள்ளவங்களுக்கு முகவாய்
கட்டை மிகவும் சின்னதா இருக்கும்.
அவுங்களுக்கு எல்லாம் புட்டு மூஞ்சினு
பட்டப் பேரை வச்சிடுவாங்க. மங்களாவும்
அந்த ரகம் தான். அதனால அவளுக்கு
முப்பது வயசு ஆகும் வரை அவளை யாரும்
பெண் கேட்டு வரல. அதனால 'வெறும்
பயல்' உதவாக்கரை ரவுடியான எனக்கு
மங்களாகூட வாழும் பாக்கியம்
கெடச்சதுங்க. எங்க (இ)ரண்டு பேரின்
குடும்பச்
செல்வுக்கும் மங்களா அப்பா, என்
மாமனாரே வேண்டிய பணம் தருவார்.
என் மனைவி மங்களா ஒரு தீவிரத்
திரைப்பட (இ)ரசிகை. அவள் மூஞ்சி
மாதிரியே முகவாய்க் கட்டை chin) மிகவும்
சின்னதாகவும் கன்னங்கள் ஊதிப்பெருத்த
நடிகர் ஒருவர் படங்கள் என்றால் அவளுக்கு
உயிர். எங்கள் பகுதியில் அந்தப் புட்டு
மூஞ்சி நடிகரின் மகளிர் (இ)ரசிகர் மன்றத்
தலைவி எனதருமை புட்டு மூஞ்சி மனைவி
மங்களா தான்.
நான் உடல் வலிமை பெற்று என்
கன்னங்கள் பெரிதானால் 'புட்டு மூஞ்சி'
என்ற பட்டப் பெயரை என் பெயரோடு
சேர்த்து 'புட்டு மூஞ்சி புலவேசு'ன்னு பெரிய
ரவுடி ஆகிடுவேனுங்க. அதுக்காக நான்
என்ன செய்தேன் தெரியுமா?
(தொடரும்)