சிதைக்கப்பட்ட என் கனவுகள்

அனைவரின் வெற்றுப் பிடிப்புகளில் நொறுங்கிப் போனது என் ஆசைக் கனவுகள் மட்டுமல்ல.., ஒட்டுமொத்தமாய் புதைந்து இன்று கடலலையில் அடித்துப் போன கிளிஞ்சல்களாய் ஓரமாய் என் திறமைகளும் ஒதுங்கித்தான் நிற்கிறது..!
இன்னும் ஏன் பார்க்கிறீர்கள்.., என் ஆசைகள் உங்களுக்கு எறிபந்தாக கொடுத்துவிட்டு..., இன்று கானல்நீரோடு எதற்கிந்த ஒப்பந்தங்கள் ? என் பாதைகளில் தெரிந்தும் உருவங்காட்டியின் சில்லுகளை வழிநெடுக விதைத்துவிட்டு.., உன் வழியை தெரிவு செய் என்பதன் நியாயத்தில் இப்பெண்மையின் இலட்சியப் படலங்கள் மௌனியத்தால் மர்மதேசம் போனது..!
உங்களுக்கு தொடுவானம் என்றபோதும்.,.,
என் திறமைக்கான சான்றை அடையும் ஆசை ஒன்றும் பேராசையாய் எனக்குத் தோன்றாத போது..,
இயலாத பெண்மை இடிந்தே போனது.., பலவருடக் கோட்டைகள் உங்கள் தூறல்களிடையே சரிந்ததே..! இனி வேண்டாம் எனக்கான கனவுகள்.., மீண்டும் உயிர்க்கவெனில் மீண்டும் என் மௌனம் மௌனமாய் மட்டும் மாயாது..!

எழுதியவர் : சரண்யா (11-Jul-19, 5:25 pm)
பார்வை : 476

மேலே