செய் அல்லது செத்துமடி

சலிப்பான வாழ்வில் சும்மா இருந்து சலித்துப்போகவில்லையா?
சலனமில்லா வாழ்வு சலித்துப்போகவில்லையா?
முடிந்த வரை முயற்சி செய்து பயணில்லாமல் போவது
முடிவல்ல; புதியதொரு தொடக்கம்.

நீ எதைச் செய்தாலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு
நீ செய்தால் மட்டுமே வெற்றிக்கனியை ருசிக்க முடியும்.
சமுதாயத்தின் உணர்ச்சிபூர்வமான செயல்களில் ஈடுபடும் போது
சமுதாயக் கடமையுணர்வு அவசியம்.

சரியான பாதையில் செல்ல மனம் தளராமல்
சரியான கவனத்தோடு நடத்தல் வேண்டும்.
ஒன்றை நோக்கி செல்லும் போது வேறொன்றை எண்ணாமல்
ஒன்றை லட்சியமாக்கி செயல்பட வேண்டும்.

மனபயம் நீங்க தகுதியை உயர்த்துதல் வேண்டும்,
மனபயம் நீங்கினால் மன அழுத்தம் நீங்கும்.
மன அழுத்தம் நீங்கினால் எதையும் சிறப்பாகச் செய்யலாம்.
மனமே நமது சக்திவாய்ந்த கருவி.

செய் அல்லது செத்துமடி, அதுவே மனதையும் உடலையும் பண்படுத்தும் தாரக மந்திரம்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Jul-19, 6:28 pm)
பார்வை : 3354

மேலே