அறுசீர் வண்ண விருத்தம்

அறுசீர் வண்ண விருத்தம்

*********************************************

தந்தன தந்தத் தனதானா ( அரையடிக்கு )

புந்திம யங்கித் திரியாதே
பொன்பொரு ளென்றைக் குடன்வாரா
அந்தக னும்பற் றிடுவானே
அஞ்சிடு னுங்கட் டவிழானே
சிந்தைந டுங்கித் தவியாதே
சென்றுக லங்கிப் பிழியாதே
கந்தனை நெஞ்சிற் பதிவாயே
கண்களி லன்பைப் பொழிவாயே !!


சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Jul-19, 12:04 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 29

மேலே