ஆறாத காயங்கள்
எழுத்துக்கள் இல்லையெனில் என் பேனாவைவிடக் குறுகியிருக்கும் என் வாழ்நாளும்..!
சில ஆறுதல்கள் என்னுள் பிறக்கின்ற போதும்.., மரணிக்காத அவன் நினைவுகளிடம் மட்டுமே விலை போகிறது..!
பத்திரப் படுத்திய உணர்வுகளும்..,
ஆறாத காயங்களின் நகல்களும்..,
உணராத நிமிடங்களில் சிந்திய ஈரங்களும்..,
விட்டுவிட்டுத் துடிக்கும் சில நினைவுகளும்..,
ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் அவனும்..,
வெறுமைகளிடம் விலைபோன நாட்களும்..,
என அத்தனையும் மொழிபெயர்த்துவிட்டு..,
உறங்க நினைத்தது என் பேனா..,
எஞ்சிய வெள்ளைத்தாள்கள் விதவையாய்..!