ரசிகை
நீ என்னை
ரசித்துக்கொண்டிருந்த பொழுது
உன்னை இமைகொட்டாமல்
பார்த்துக்கொண்டிருந்தேன்
உன் இமைகளுக்குள் நின்ற
விழிகளின் ஒளி
அதன் உற்சாகம்
என்னால் உண்டானதென
கொஞ்சம் கர்வம் வந்தது
அவ்வளவு பிடிக்குமோ என்னை..!
உள்ளங்கையில் அள்ளும்
ஆர்வத்தில்
ஒரு குழந்தைபோல்
ஒரு பட்டாம்பூச்சிபோல்
மாறி நிற்கிறாயே..
ஆகப்பெரும் ரசிகைநீ
ரசிக்கிறேன்