காதல் கவிதை

பெண்ணே!
நாளை
என் பெயர் சொல்லும்
உனக்கும் எனக்கும்
பிறந்த கவிதைகள்.....

உன்னை
காண்கின்றபோது
நான்
காணாமல் போகின்றேன்.....

என்மேல்
எனக்கே பொறாமை
என்னை விட்டுவிட்டு உன்னை தலைக்குமேல்
தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது
என்னுடைய மனம்...

நான் ஒரு சுயநலவாதிதான்
உனக்காகவே
உயிர் வாழ்கிறேன்...

ஓ....!
உறங்கச் சென்று விட்டாயா?
இல்லையென்றால்
நிலவு
வெளியே வந்திருக்குமா?

தென்றல் வரும் முன்னே
நீ வருவாய் பின்னே...

நீ மட்டும் அல்ல
உன் பெயர் கூட
எனக்கொரு
கவிதைதான்...


*கவிதை ரசிகன்*
_குமரேசன்_

💚💞💚💞💚💞💚💞💚💞

எழுதியவர் : காதல் கவிதை (22-Dec-19, 9:50 am)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 71

மேலே