Rafiq - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Rafiq
இடம்:  காசிபாளையம்
பிறந்த தேதி :  31-Mar-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Sep-2019
பார்த்தவர்கள்:  1697
புள்ளி:  170

என் படைப்புகள்
Rafiq செய்திகள்
Rafiq - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2020 10:01 pm

ஆளில்லா சாலை
தனிப்பயணம்
தூரத்துக்கருக்கல் அங்கே
தூறும் மழை..
தூறலிடைபுகுவெயில் தந்த வானவில்
மண்வாசம் குழைத்த
புதுக்காற்று
எதனாலோ
உனைத்தேடிடும் மனம்..

Rafiq

மேலும்

Rafiq - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2020 4:08 pm

புழுதி

மேலும்

Rafiq - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2020 12:17 pm

உனைக்கடந்துசென்ற தென்றல்
உன்வாசம்
சூடிக்கொண்டதால்
பூக்களை
வெறுத்துவிட்டதாகத் தகவல்.

Rafiq

மேலும்

Rafiq - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2020 12:15 pm

உனைவிட ஒரு பேரழகினை
இதுவரை கடந்ததில்லை..
நம்பு
இதுமட்டும் உண்மை..

Rafiq

மேலும்

Rafiq - Rafiq அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Mar-2020 2:52 pm

பேரன்பே நீ
என் மனம் கிறுக்கிய
வெள்ளைத்தாள்
என் உயிர் எழுதிய
புதுக்கவிதை
உணர்வுக்குள் குதூகளிக்கும்
சிறுகுழந்தை
துயரத்தின் விதைக்கோளம்
பெருங்காதலின்
சிறுதீபம்
உயிரெரியச்செய்யும்
ஒற்றைப்பொறி..
வானாந்திரப்பேய்மழை தப்பித்த
சிறுதுளி..
பேரன்பே நீ
யாருமற்ற வெளியில் தென்பட்ட
தேவதை
அற்புதங்களின்
குவியல்
ஆலிங்கனமில்லா அதிசயக்கூடல்..
அலையில்லாக்கடலின்
தங்கமீன்
மிச்சம்வைத்துத்தினம் தொடரும்
இன்பக்கனா..
அமைதியின் நடுவில்படரும்
அற்புத மணம்..
நினைக்கையில் இனிக்கும்
வானமுதம்..
சொர்க்கம்..

Rafiq

மேலும்

நன்றி நண்பரே 12-Mar-2020 10:54 pm
அருமை ... 12-Mar-2020 8:54 pm
Rafiq - எம் அம்மு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2017 11:19 am

அகிலத்திற்கே
அன்னையானவர்!
பெண் குலத்திற்கே
பெருமையானவர்!

கருணை பொங்கும்
விழியுடையவர்!
மாதர் குலத்தின்
விழியானவர்!

தமக்கென வாழாதவர்!
பிரர்க்கென தன்னை
கொடுத்தவர்!

கருணைத் தாயின்
தவப்புதல்வி அவர்!
காவியம் போற்றும்
நாயகியவர்!

சகிப்புத் தன்மை
ஒன்றே அவர் சொத்தாம்!

யாசகம் பெற்றே
சேவை ஆரம்பித்தார்!

அவர் தேவையெல்லாம்
"ஒரே தேவை சேவை"
மட்டுமே..

"இந்த உலகையே நிர்வகிக்கும் கடவுள்களுக்கு சேவை செய்ய போகிறேன் " என்று கூறி
சமூகசேவை பணியாற்றியவர்!

அவமானங்கள் எல்லாம்
அவர் வெற்றிப்
படிக்கட்டாகியவர்!

அன்னையே!
எங்கோ பிறந்தாய்!
இங்கே இறந்தாய்!

ஆனால்

மேலும்

அன்னையின் நினைவுகளை கிளறியது.அன்பின் உருவாய் வாழ்ந்த மாமனிதர் அவர் 26-Feb-2020 2:22 pm
Rafiq - Rafiq அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2020 10:43 pm

உன் பார்வைகளாய் என் பக்கங்கள்
பதிந்திருக்க
ஏனோ
மௌனத்தை மட்டும் தந்துகொண்டிருக்கிறாய் அன்பே
உன் சுவாசங்களாய் என் அறைகள்
நிறைந்திருக்க
ஏனோ
வாசம் மட்டும் விட்டுச்செல்கிறாய் அன்பே
தடையங்களைமட்டும் ரசித்திருப்பது
பேரன்பில் விளையும்
பெருங்கொடுமை
உன் அழைப்பிற்காய்
வானம் வரை விழிகள் விதைத்துள்ளேன்
கருணை செய்..

Rafiq

மேலும்

யார் அழைப்பிற்கு நண்பா?? 😉 25-Feb-2020 8:13 pm
அருமை உன் அழைப்பிற்காக காத்திருக்கும் காதல் கவிஞன் 25-Feb-2020 7:29 pm
நன்றி 25-Feb-2020 4:03 pm
மிக மிக அருமையான படைப்பு 25-Feb-2020 3:40 pm
Rafiq - Rafiq அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2020 10:27 pm

நேசித்தலின் உச்சத்தில் உனை
நினைக்கும்பொழுது
நீ மேலும் மேலும் அழகாகிறாய்
உன் பிரிவினிலும்
மௌனத்திலும்
உன் குரலின் ஆளுமையில்
கற்பனைகள் சிறகடித்துக்கொண்டுள்ளன
அன்பின் ஆழத்தினை
கற்பித்துக்கொண்டே இருக்கிறாய்
உன் பெருங்கருணையின் பிடியில்
மூர்ச்சையாகிறேன்
இமையடிப்பின் குளுமையில் முத்தமிட்டு
மூச்சினைக்கொடு..

Rafiq

மேலும்

நன்றி 24-Feb-2020 3:34 pm
உன் மூச்சுக்காற்றில் உயிர்வாழ்கின்றேன் நான் 24-Feb-2020 3:32 pm
Rafiq - Rafiq அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2019 5:49 pm

பெண்ணே..

சபித்தபடி நீ சிரித்தாய்
குரூரப்பார்வைகளில்
வளர்ந்த காதல்
இதயக்கீறலில் வழிந்த
குருதியைக்குடித்தே செழிக்கின்றது..
நடுவெயில் மணற்பரப்பாய்
தகிக்கின்ற மனதுள்
நடக்கின்ற புழுவாய் உன்
நினைவு ..
நெருப்பினில் குளித்த கூர்முனையாலுன்
பேரெழுதிச்செல்கிறாய்
கனவிற்குள்..
கொடுங்கோடையடி உன் இளமை 
நீரில்லா நிலமாய் நான்...  

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே