பெண்ணே

உன் பார்வைகளாய் என் பக்கங்கள்
பதிந்திருக்க
ஏனோ
மௌனத்தை மட்டும் தந்துகொண்டிருக்கிறாய் அன்பே
உன் சுவாசங்களாய் என் அறைகள்
நிறைந்திருக்க
ஏனோ
வாசம் மட்டும் விட்டுச்செல்கிறாய் அன்பே
தடையங்களைமட்டும் ரசித்திருப்பது
பேரன்பில் விளையும்
பெருங்கொடுமை
உன் அழைப்பிற்காய்
வானம் வரை விழிகள் விதைத்துள்ளேன்
கருணை செய்..

Rafiq

எழுதியவர் : Rafiq (24-Feb-20, 10:43 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : penne
பார்வை : 351

மேலே