இதுதான் நியதி

சீசன் முடிந்தும் மாமரம் பூத்துக் காய்க்கிறது....
பக்கத்து வீட்டாருக்கு ஊறுகாய் ஆகிறது

பப்பாளி தவறாது காய்க்கிறது
பின் வீட்டார்க்கு வைட்டமின் A குறைபாடில்லாமல் காக்கிறது

சுண்டைக்காய் விடாமல் பூத்துக் காய்க்கிறது
வீட்டிற்கு வருபவர்களுக்கு நல் வரவு ஆகிறது

நித்தம் பூக்கும் நித்திய மல்லி
புதிதாய் கட்டிய தேன் கூட்டிற்கு ஆதாயம் சேர்க்கிறது

பிப்ரவரி பாதியில் பூக்கத் தொடங்கிய டிசம்பர் பூ
கீழ்வீட்டு பெண்பிள்ளைகள் கூந்தலை அலங்கரிக்கிறது

தினப் பலனுக்காய் தேங்காயும் காய்க்கிறது
அடித்தளத்தில் வாடகை இருப்பவர் பயன்படுத்தி விட்டது போக மீதி
எங்களுக்கு கிட்டுகிறது

சிவப்புப் பொன்னாங்கன்னி கீரை மட்டுமே
முழுதாய் எங்கள் பயன்பாட்டிற்கு....

இறைவன் படைத்த பூமி....
இடையில் பட்டா போட்டது நாம் தான்....
நட்டது நான்.... நீர் ஊற்றி பராமரிப்பதும் நானே....
பலன் மட்டும் பகிர்ந்து செல்கிறது.....
வீணாகாமல் எவருக்கேனும் பயன்படுவதால் மனதில் ஒரு நிம்மதிதான்

இதுதான் இறைவன் எனக்கு விதித்த நியதியும் போல.....
முழுதாய் மனம் இதை ஏற்பதால் நிம்மதி நிலையாய்....

எழுதியவர் : வை.அமுதா (24-Feb-20, 10:02 pm)
Tanglish : ithuthaan neyadhi
பார்வை : 117

மேலே