பேரன்பே

பேரன்பே நீ
என் மனம் கிறுக்கிய
வெள்ளைத்தாள்
என் உயிர் எழுதிய
புதுக்கவிதை
உணர்வுக்குள் குதூகளிக்கும்
சிறுகுழந்தை
துயரத்தின் விதைக்கோளம்
பெருங்காதலின்
சிறுதீபம்
உயிரெரியச்செய்யும்
ஒற்றைப்பொறி..
வானாந்திரப்பேய்மழை தப்பித்த
சிறுதுளி..
பேரன்பே நீ
யாருமற்ற வெளியில் தென்பட்ட
தேவதை
அற்புதங்களின்
குவியல்
ஆலிங்கனமில்லா அதிசயக்கூடல்..
அலையில்லாக்கடலின்
தங்கமீன்
மிச்சம்வைத்துத்தினம் தொடரும்
இன்பக்கனா..
அமைதியின் நடுவில்படரும்
அற்புத மணம்..
நினைக்கையில் இனிக்கும்
வானமுதம்..
சொர்க்கம்..

Rafiq

எழுதியவர் : Rafiq (12-Mar-20, 2:52 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 146

மேலே