எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்ணே.. சபித்தபடி நீ சிரித்தாய் குரூரப்பார்வைகளில் வளர்ந்த காதல்...

பெண்ணே..

சபித்தபடி நீ சிரித்தாய்
குரூரப்பார்வைகளில்
வளர்ந்த காதல்
இதயக்கீறலில் வழிந்த
குருதியைக்குடித்தே செழிக்கின்றது..
நடுவெயில் மணற்பரப்பாய்
தகிக்கின்ற மனதுள்
நடக்கின்ற புழுவாய் உன்
நினைவு ..
நெருப்பினில் குளித்த கூர்முனையாலுன்
பேரெழுதிச்செல்கிறாய்
கனவிற்குள்..
கொடுங்கோடையடி உன் இளமை 
நீரில்லா நிலமாய் நான்...  

பதிவு : Rafiq
நாள் : 4-Sep-19, 5:49 pm

மேலே