அன்பே

நேசித்தலின் உச்சத்தில் உனை
நினைக்கும்பொழுது
நீ மேலும் மேலும் அழகாகிறாய்
உன் பிரிவினிலும்
மௌனத்திலும்
உன் குரலின் ஆளுமையில்
கற்பனைகள் சிறகடித்துக்கொண்டுள்ளன
அன்பின் ஆழத்தினை
கற்பித்துக்கொண்டே இருக்கிறாய்
உன் பெருங்கருணையின் பிடியில்
மூர்ச்சையாகிறேன்
இமையடிப்பின் குளுமையில் முத்தமிட்டு
மூச்சினைக்கொடு..

Rafiq

எழுதியவர் : Rafiq (23-Feb-20, 10:27 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : annpae
பார்வை : 285

மேலே