மகளிர்தினம்1 - அன்னை தெரசா

அகிலத்திற்கே
அன்னையானவர்!
பெண் குலத்திற்கே
பெருமையானவர்!

கருணை பொங்கும்
விழியுடையவர்!
மாதர் குலத்தின்
விழியானவர்!

தமக்கென வாழாதவர்!
பிரர்க்கென தன்னை
கொடுத்தவர்!

கருணைத் தாயின்
தவப்புதல்வி அவர்!
காவியம் போற்றும்
நாயகியவர்!

சகிப்புத் தன்மை
ஒன்றே அவர் சொத்தாம்!

யாசகம் பெற்றே
சேவை ஆரம்பித்தார்!

அவர் தேவையெல்லாம்
"ஒரே தேவை சேவை"
மட்டுமே..

"இந்த உலகையே நிர்வகிக்கும் கடவுள்களுக்கு சேவை செய்ய போகிறேன் " என்று கூறி
சமூகசேவை பணியாற்றியவர்!

அவமானங்கள் எல்லாம்
அவர் வெற்றிப்
படிக்கட்டாகியவர்!

அன்னையே!
எங்கோ பிறந்தாய்!
இங்கே இறந்தாய்!

ஆனால்
அனைவர் நெஞ்சங்களிலும்
வாழ்கிறாயம்மா!

மகளிர்த்தினம் வந்தாலே
உன்னைத்தான் முதலில்
நினைக்கத்தோன்றுதே!

எழுதியவர் : எம் அம்மு (1-Mar-17, 11:19 am)
சேர்த்தது : எம் அம்மு
பார்வை : 73

மேலே